பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு - பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

17/08/2022

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு - பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

 பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது சென்னை, கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது. மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இந்நிலையில், கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம், விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும், பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்றும் முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459