சிறப்பு கலந்தாய்வு: 59 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு - ஆசிரியர் மலர்

Latest

21/08/2022

சிறப்பு கலந்தாய்வு: 59 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு

 சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள 1 லட்சத்து 56 இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதலில் அரசு பள்ளியில் படித்த சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கு கவுன்சிலிங் தொடங்கியது. அரசு பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடந்தது. 110 மையங்களில் ஆன்லைன் வழியாக நடந்த கலந்தாய்வில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் சிறந்த கல்லூரிகளில் விருப்பப்பாடப் பிரிவுகளை தேர்வு செய்தனர். இரவு அவர்களுக்கு உத்தேச ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த இடங்கள் உறுதி செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் 21 பேரும், முன்னாள் ராணுவத்தின் குடும்பத்தினர் 2 பேரும், விளையாட்டு பிரிவில் 36 பேருக்கும் தேர்வு செய்த கல்லூரிகள் இன்று ஒதுக்கப்பட்டன. பிற்பகலில் அவர்களுக்கு ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து மாலை 7 மணிக்கு பொது சிறப்பு பிரிவு கலந்தாய்வு தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளை தேர்வு செய்கிறார்கள். நாளை மாலை 7 மணி வரை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. 23-ந்தேதி காலையில் உத்தேச ஒதுக்கீட்டு இடங்கள் வழங்கப்படும். 24-ந்தேதி காலையில் கல்லூரியில் சேர்வதற்கான ஒதுக்கீட்டு கடிதம் வழங்கப்படும். அதனை தொடர்ந்து 25-ந்தேதி முதல் பொதுப்பிரிவு கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடக்கிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459