பிளஸ் 2 துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

21/08/2022

பிளஸ் 2 துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்

 பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகளை, நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.


அவர் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்கள், தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக, நாளை பகல் 2:00 மணி முதல், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இணையதளத்தில் நுழைந்ததும், 'ரிசல்ட்' தோன்றும். அதில், பிளஸ் 2 துணைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை 'கிளிக்' செய்தால் தோன்றும் பக்கத்தில், தேர்வு எழுதியவர்கள் தங்கள் தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும் 24, 25ம் தேதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்திற்கும் 275 ரூபாய்; மறு கூட்டல் கட்டணமாக, உயிரியல் பாடத்திற்கு, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 205 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459