11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் அமைச்சர் அன்பில் மகேஸ் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

15/08/2022

11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் அமைச்சர் அன்பில் மகேஸ்

சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க மாநிலத் தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேசியக் கொடி ஏற்றினார். இதனைத் தொடர்ந்து அவர் சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஸ், சிக்கனமாக, ஒழுக்கமாக, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்கு சாரண, சாரணியர்கள் ஓர் உதாரணம் எனவும், நிலவுக்குச் சென்றவர்களில் 11 பேர் சாரண, சாரணியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தமிழகத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படும் என வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இதனை மறுத்த அவர், 11-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைமுறை தொடரும் எனவும், அதில் குழப்பம் வேண்டாம் எனவும் பதிலளித்தார். 11ஆம் வகுப்பில் பாடங்கள் முறையாக நடத்தப்படவில்லை என்ற காரணத்தால்தான் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முறையே கொண்டு வரப்பட்டது எனவும், எனவே, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment