அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

15/08/2022

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.நாட்டின் 76வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றினார். நாடு முழுக்க மாநில தலைநகரங்களில் மாநில முதல்வர்கள் கொடி ஏற்றி மரியாதையை செய்தனர்.சென்னை, கோட்டை கொத்தளத்தில் 2வது ஆண்டாக தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிகழ்வில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் முதல்வர் ஸ்டாலின்.


ஸ்டாலின்


இதையடுத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டது தமிழ்நாடு தான். அடிமைப்படுத்தல் என்று தொடங்கியதும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் தமிழர்கள் தான். நாடு முழுக்க சுதந்திர போராட்டத்திற்கான வேட்கையை ஏற்படுத்தியவர்கள் தமிழர்கள்தான். ஒரு தமிழனாக நான் இங்கே பெருமை கொள்கிறேன்.என்ன சொன்னார்விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.தியாகத்தைப் போற்றுவதில் திமுக அரசு எப்போதும் முன்னோடியாக உள்ளது. சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு எனது வீர வணக்கம். இன்று கோட்டையில் கொடி ஏற்றுவது பெருமையாக இருக்கிறது. மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்த கருணாநிதியை நினைவு கூர்கிறேன்.


தியாகி

எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்., அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31%ல் இருந்து 34% ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல் விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தொகை உயர்த்தப்படும்.


உயர்வு


விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தொகை இன்று முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தப்படும். கட்டணமில்லாப் பேருந்து வசதி மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் அதிகமாகி இருக்கிறது. ஓராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது, என்று2022, அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment