திருக்குறள் :
பால்: பொருட்பால்
இயல்: குடியியல்
அதிகாரம்: சான்றாண்மை
குறள் : 986
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
பொருள்
சான்றாண்மையை உரைத்துப் பார்த்துக் கண்டு அறியப்படும் உரைகல் எதுவென்றால், சிறியவர்களிடம் கூடத் தன் தோல்வியை ஒத்துக் கொள்வதே ஆகும்.
பழமொழி :
The worth of the thing is best known by the want
உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. உளி படாத கல் சிலை ஆவதில்லை. அது போலவே உழைப்பில்லாத கனவு நனவாவதில்லை.
2. முயற்சியும் பயிற்சியும் சாதாரண மனிதனையும் சாதனையாளராக மாற்றும்
பொன்மொழி :
உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில்
சரியான உதவிகளை செய்பவன் தான்.
அந்த நட்பை விட்டு விடக் கூடாது.
- புத்தர்
பொது அறிவு :
1.தண்ணீரில் கரையும் வைட்டமின்கள் எவை ?
பி1, பி2 .
2.ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் எவ்வளவு தண்ணீர் உள்ளது?
75%(45 லிட்டர்)
English words & meanings :
Warship - a ship built for the defence forces. Noun. போர் கப்பல். பெயர்ச்சொல்.
NMMS Q 25:
ஆடிகளில் தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை ஆடிகளுக்கிடையே உள்ள ____________ சார்ந்தது.
விடை: சாய்வுக் கோணத்தை
ஜூலை 15 இன்று
காமராசர் அவர்களின் பிறந்த நாள்
காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நீதிக்கதை
மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!
ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்கள் பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன். அறை வாங்கியவன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.
விரல்களால் மணல் இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்! என்று எழுதினான். மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள். வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள். நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள். கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. அவன் புதைகுழியில் சிக்கிக் கொண்டான்.
நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன். உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீது அமர்ந்தான். அங்கு ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி, இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான் என்று எழுத ஆரம்பித்தான்.
இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்... நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏன் இப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா? என்றான். அதற்கு நண்பன், யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்! என்று பதில் கூறினார்
இன்றைய செய்திகள் - 15.07.22
◆டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.
◆தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
◆சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு மாமல்லபுரத்தில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ஆய்வு: காஞ்சியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்.
◆குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
◆அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.
◆பிரிட்டன் பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல் கட்ட தேர்தல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் பல கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
◆உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.
◆சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றம்.
◆பெண்கள் உலக கோப்பை ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி.
Today's Headlines
◆Hall Ticket Release for TNPSC Group 4 Exam.
◆Tamil Nadu Health Minister has said that steps are being taken to set up 50 new primary health centers in Tamil Nadu.
◆ Survey of Tourism Development Activities in Mamallapuram ahead of International Chess Olympiad: Awareness Marathon Run at Kanchi.
◆The Union Health Ministry has directed all states to keep medical facilities ready in response to the outbreak of monkey measles.
◆ The Supreme Court is going to hear the PILs filed against the fire corridor project today.
◆Rishi Sunak has won the first round of the British Prime Minister election. There will be several phases of elections.
◆ Shooting World Cup: Indian pair win gold
◆ Singapore Open Badminton: PV Sindhu, and Saina Nehwal advance to quarterfinals.
◆Women's World Cup Hockey: India beat Japan to win.
Prepared by
Covai women ICT_போதிமரம்
No comments:
Post a Comment