மாணவர்களுக்கு இலவச புத்தகம் விதியை எதிர்த்த மனு தள்ளுபடி - ஆசிரியர் மலர்

Latest

22/06/2022

மாணவர்களுக்கு இலவச புத்தகம் விதியை எதிர்த்த மனு தள்ளுபடி

கல்வி உரிமை பெறும் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, இலவச புத்தகம், சீருடையை தனியார் பள்ளிகள் வழங்க வேண்டும் என்ற விதியை எதிர்த்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இலவச கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை எளிய மாணவர்களை சேர்க்க வேண்டும். இந்த மாணவர்களுக்கு,இலவசமாக பாட புத்தகம், சீருடையை பள்ளிகளே வழங்கவும், 2010ல் விதிகள் ஏற்படுத்தப்பட்டன.இந்த விதியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியின் தாளாளர் சடகோபன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார்.

மனு, தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை 12 ஆண்டுகள் தாமதமாக தொடர்ந்ததற்கான காரணங்களை விளக்கவில்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459