RTE ACT 25% தனியார் பள்ளி இலவச கல்வி இடஒதுக்கீடு விண்ணப்பிக்க கால அவகாசம் தேவை - ஆசிரியர் மலர்

Latest

15/05/2022

RTE ACT 25% தனியார் பள்ளி இலவச கல்வி இடஒதுக்கீடு விண்ணப்பிக்க கால அவகாசம் தேவை

 தமிழக அரசின் கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, அனைத்து வகை சுயநிதி பள்ளிகளிலும், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு என்ற நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இடங்களை, அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும்.

இந்த இடங்களில், ஏழை மாணவர்கள், கல்வி கட்டணமின்றி சேர்க்கப்படுவர். அவர்களுக்கான கட்டணத்தை, பள்ளிகளுக்கு அரசே வழங்கும். இந்த திட்டத்தில் சேரும் மாணவர்கள், எட்டாம் வகுப்பு வரை கல்வி கட்டணமின்றி, அதே பள்ளியில் படிக்கலாம்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, ஏப்., 20ல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது; வரும், 18ம் தேதி முடிகிறது. மாநிலம் முழுதும், 1.30 லட்சம் காலியிடங்கள் உள்ளன. அவற்றுக்கு, இதுவரை ஒரு லட்சம் பேர் வரை பதிவு செய்து உள்ளனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459