பணியை விரைந்து முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை - CEO Proceedings - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

13/05/2022

பணியை விரைந்து முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை - CEO Proceedings

கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் :
பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் நாள் 13.05.2022 பார்வையில் கண்ட அறிவுரைகளின்படி கீழ்க்காண் அறிவுரைகள் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது 

1. அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இன்று 13.05.2022 உடன் தேர்வுகள் நிறைவு பெறுவதால் நாளை 14.05.2022 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது . 

2 அனைத்துவகை அரசு 7 அரசு உதவிபெறும் சுயநிதிப் பள்ளிகளில் விடைத்தாட்கள் திருத்துதல் , 1 முதல் 9 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் ( தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் ) மற்றும் தேர்ச்சியறிக்கை பதிவேடு தயாரித்தல் போன்ற பணிகளை முடித்திட ஏதுவாக பள்ளி ஆசிரியர்கள் 20.05.2022 வரை பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது .  

3. அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதிப் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைப் பொறுத்தவரை பள்ளி மாணவர்கள் / ஆசிரியர்களின் வருகைப்பதிவு விவரம் EMIS இணையத்தில் உள்ள பதிவுகளுடன் ஒத்திருப்பதை சரிபார்க்க வேண்டும் இரண்டு பதிவுகளும் வேறுபடும் பட்சத்தில் அவற்றை சரி செய்ய வேண்டும் மேலும் அவை இரண்டும் சரியாக உள்ளது என்பதற்கான சான்றினை பள்ளித் தலைமையாசிரியர் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் 

4. அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மேற்காண் அறிவுரை பொருந்தும் . தேர்வுப் பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்வுப் பணி முடிந்தவுடன் இப்பணியை மேற்கொள்ளலாம் . 20.05.2022 க்குள் இப்பணியை முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது . உதாரணமாக திங்கள் , செவ்வாய் ( 16.05.2022 மற்றும் 17.05.2022 ) நாட்களில் பணிகள் முடிக்கப்பெற்றால் 18.05.2022 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை . 

5. மேலும் முன்னரே துறைத் தலைவரின் அனுமதி பெற்று வெளிநாட்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ள ஆசிரியர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மேற்காண் பணிகளை முடிப்பதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது . அவர்கள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது . 

6. நாளை 14.05.2022 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி


No comments:

Post a Comment