தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

18/05/2022

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி

அரசு பள்ளிகளில் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு வாரம் எண்ணும், எழுத்தும் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறையின் பாட திட்ட தயாரிப்பு பிரிவான, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:


தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, வரும் கல்வி ஆண்டுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, முதன்மை கருத்தாளர்களாக செயல்படும் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரும், 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை, மதுரையில் ஆறு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியை முடித்த பின், பள்ளிகள் திறந்ததும், மற்ற ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர்கள் வழியே, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459