கோடை விடுமுறை நீட்டிப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

20/05/2022

கோடை விடுமுறை நீட்டிப்பு: தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

கோடை விடுமுறையை நீட்டிக்காமல், ஜூன் 13ம் தேதியே பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கத்தினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து, 14ம் தேதி முதல், கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள், ஜூன் 1 முதல் துவங்க உள்ளன. பட்டதாரி ஆசிரியர்களும், முதுநிலை ஆசிரியர்களும், விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு கோடை விடுமுறை கிடைக்காத நிலை உள்ளது. எனவே, கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து உள்ளனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச்செயலர் நந்தகுமார், பள்ளிக் கல்வி துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று பாதிப்பால், இரண்டு ஆண்டுகளாக பெரும்பாலான நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகி விட்டன. வரும் கல்வி ஆண்டிலாவது, முழு அளவில் பள்ளிகளை திறந்து, பாடங்கள் நடத்த வேண்டும். இதற்கு பெற்றோரும், மாணவர்களும், பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் தயாராக உள்ளனர். எனவே, திட்டமிட்டபடி, பள்ளிகளை திறக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459