50,000க்கும் மேற்பட்ட மாணவர்களால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாது - ஆசிரியர் மலர்

Latest

 




07/04/2022

50,000க்கும் மேற்பட்ட மாணவர்களால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாது

TET தேர்விற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13 தான் கடைசி தேதி என்பதால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு TET தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தேவையான இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வினை நடத்தி வருகிறது. டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் படித்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். டெட் இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதிக்கொள்ளலாம். இரண்டாவது தாளை பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதலாம் மற்றும் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் முதல் தாளையும் எழுதலாம். டெட் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 14ஆம் தேதி வெளியாகி உள்ளது. மேலும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதலாம் ஆண்டு பிஎட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத காரணத்தினால், ஏப்ரல் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக டெட் தேர்வு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேர்விற்காக பலரும் காத்துக் கொண்டிருந்த வேளையில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.பி.எட். மாணவர்களின் முதலாம் ஆண்டு தேர்வு பிப்ரவரி 16ம் தேதி தான் முடிவடைந்தது.

தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு எப்படியும் சில நாட்கள் ஆகும். ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாவது சந்தேகமே. இதனால் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்களால் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாது என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் எம் கோவிந்தன் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459