சித்திரை மாத ராசி பலன் 2022: சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/04/2022

சித்திரை மாத ராசி பலன் 2022: சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்


சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் உச்சமடைகிறார். சித்திரை மாதம் மேஷ மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுவதும் இந்த மாதத்தில்தான். அம்மன் ஆலயங்களில் தேரோட்டம் உற்சவங்கள் களைகட்டும். பல்வேறு சிறப்புக்கள் கொண்ட சித்திரை மாதத்தில் உச்சம் பெற்ற சூரியனாலும் ஆட்சி பெற்ற குருவினாலும் தனுசு, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷ ராசியில் உச்சம் பெற்ற சூரியன், புதன் ராகு... துலா ராசியில் கேது... மகரத்தில் சனி...கும்பத்தில் செவ்வாய் சுக்கிரன்... மீனத்தில் குரு என கிரகங்கள் பயணிக்கின்றன. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் புதன் 11 ஆம் தேதி ரிஷபத்திற்கும் சுக்கிரன் 14ஆம் தேதி மீனத்திற்கும் சனி 16 ஆம் தேதி கும்பத்திற்கும் இடம் பெயர்கிறார்கள்.மற்ற கிரகங்களில் எந்த வித மாற்றமும் இல்லை. நவகிரகங்களின் சஞ்சார மாற்றத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.தனுசுவினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே...சித்திரை மாதத்தில் கிரகங்களின் நகர்வுகள் தரமான பலன்களைத் தரப் போகின்றன. உங்களின் பாக்கிய ஸ்தானாதிபதியான சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்ச நிலையில் இருக்கிறார். இது அபரிமிதமான யோகத்தை தரும் அமைப்பாகும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் கண்டிப்பாக அதில் இறங்கலாம். அரசாங்க வேலை பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தனியார் துறையை தொழிலாளர்களுக்கும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். மூன்றாம் இடத்தில் இருக்கும் செவ்வாய் சகோதர உறவுகளை மேம்படுத்துவதுவார். அவர்களின் உதவி உங்களுக்கு நிச்சயம் உண்டு. மணல் வியாபாரிகள் லாபத்தை அள்ளுவார்கள். கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள் கணிசமான லாபத்தை பெறுவார்கள். சூரியனோடு சேர்ந்து இருக்கும் புதனும் யோகத்தைக் கொடுக்க தயங்க மாட்டார். மாமன் வழியில் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.புத்திசாலித்தனத்தால் எந்த காரியத்தையும் சாதிப்பீர்கள். 6-ஆம் இடத்துக்கு மாறும் புதன் அனுகூலத்தை அளிப்பார். தொழிலில் இருந்த போட்டிகள் மறைந்து போகும். ராசியாதிபதி குரு 4 இல் சொந்த வீட்டில் அமர்ந்திருக்கிறார். வெளியிடங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.வழக்குகளின் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். இரண்டாம் இடத்து சனி பகவான் தொழிலுக்கு உதவியாக இருப்பார். வாக்கு தவறாமை முக்கியம். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சர்ப்ப கிரகங்கள் இரண்டும் உங்களை ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள வைக்கும்.மகரம்வியூகங்கள் மூலம் வெற்றிகளை காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....புது வருடத்தின் முதல் மாத பலன்களை பூரிப்புடன் அனுபவிக்கப் போகிறீர்கள்.8-ஆம் இடத்துக்குரிய சூரியன் உச்சத்தில் இருப்பதால் வீட்டில் இருந்த பிரச்சினைகள் அகன்று நிம்மதி கிடைக்கும். வெளியூர் பயணங்களில் நல்ல பலனைப் பெறப் போகிறீர்கள். எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி உதவி செய்வார்கள். இரண்டாம் இடத்து செவ்வாய் வாத திறமையை வெளிப்படுத்தி வியாபாரத்தை விருத்தி செய்ய வைப்பார். தொழில் துறைகளில் மிக நேர்த்தியான முன்னேற்றம் கிடைக்கும். அண்டை அயலாருடன் ஏற்பட்ட பகை நீங்கி சுமூகமான உறவு உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் தந்து உதவுவார்கள். கடன் சுமைகள் கணிசமாக குறையும்.புதனும் நாலாம் இடத்தில் நல்ல நிலையில் இருக்கிறார். அடுத்து நகரும் 5-ஆம் இடமும் சிறப்பு தான். வழக்கறிஞர்களுக்கு இது யோகமான காலம். அரசு வேலையில் இருப்பவர்கள் மேலதிகாரியின் அன்பை பெறுவார்கள். தனியார் துறைகளில் தரமான சம்பளம் கிடைக்கும்‌. மூன்றாம் இடத்து குரு உங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் அளிப்பார். சென்ற இடமெல்லாம் சிறப்பு பெறுவீர்கள். வியாபாரத்தில் வெற்றி கொடி நாட்டுவீர்கள். ராசியில் இருக்கும் ராசியாதிபதி சனி பாதகங்கள் வராமல் பாதுகாப்பார். வீடு மனை வாங்கி விற்கும் தொழில் அமோகமாக நடக்கும். இரும்பு வியாபாரம் சூடுபிடிக்கும். பிள்ளைகள் கல்வியில் தேர்ச்சி பெறுவார்கள். நான்காம் இடத்து ராகுவால் குடும்பத்தில் கொஞ்சம் நிம்மதி குறைந்தாலும் பத்தாம் இடத்து கேது எந்தக் குறையும் வராமல் பார்த்துக் கொள்வார்.கும்பம்சாணக்கியத்தனத்தால் சாதனை புரியும் சனிபகவானை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே...சித்திரை மாதத்தின் பலன்களை கொத்தாக பெறப் போகிறீர்கள். ஏழாம் இடத்து அதிபதியான சூரியன் மூன்றாம் இடத்தில் உச்சமாக இருக்கிறார். உங்களை அழிக்க நினைப்பவர்கள் ஒழிந்து போவார்கள். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தொழில் துறைகளில் புதிய சாதனை படைப்பீர்கள். ராசியில் நிற்கும் செவ்வாய் வீடு கட்டும் யோகத்தை கொடுப்பார். செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பூமியில் போட்ட பணம் விளைச்சலாக பெருகும். வீடு புனரமைப்பு வேலைகளை செய்து முடிப்பீர்கள். சகோதர சகோதரிகளுக்கு பண உதவி செய்வீர்கள். மூன்றாம் இடத்தில் நிற்கும் புதன் உங்கள் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட நினைத்தாலும் அதை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சிறு சிறு வியாபாரிகள் சிறப்பான லாபத்தைப் பெறுவார்கள். நீண்ட கால கடன்களை அடைத்து மன நிம்மதி அடைவீர்கள். வீட்டில் பெண்கள் தங்க நகைகள் வாங்குவார்கள். ராசியில் இருக்கும் சுக்கிரன் உதவியாக இருப்பார். அலங்கார தொழில் விற்பனை அமோக லாபத்தை கொடுக்கும். பியூட்டி பார்லர் வைத்திருப்பவர்களுக்கு இது பொற்காலம். இரண்டாம் இடத்தில் இருக்கும் குரு பகவான் எல்லா நன்மைகளையும் செய்வார். வெளிநாட்டு பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த கிராமத்தில் புதிய வீடு கட்டுவார்கள். வராக் கடன்கள் வந்துசேரும். 12க்கு உரிய சனி 12ல் இருக்கிறார். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். எதிர்பாராத பண வரவு உண்டாகும். மூன்றாம் இடத்து ராகுவும் 9ஆம் இடத்துக்கு கேதுவும் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை பெற்று தருவார்கள்.மீனம்பார்வையால் பலன்களை அள்ளித்தரும் குரு பகவானை அதிபதியாக கொண்ட மீனராசி அன்பர்களே....இந்த சித்திரை மாதம் உங்களுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கும். உச்சநிலையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சூரியன் வாக்கு வன்மையால் மற்றவர்களை வசீகரிக்க வைப்பார். தொழிலில் ஏற்படும் போட்டிகளை வெல்வீர்கள். யார் கேட்டாலும் தயங்காமல் உதவி செய்வார்கள். செல்லுமிடமெல்லாம் செல்வாக்காலும் சொல்வாக்காலும் சிறப்பு பெறுவீர்கள். அரசாங்க பணியில் இருக்கும் இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களை பெறுவார்கள். செவ்வாய் பன்னிரண்டில் இருக்கிறார். வேலை நிமித்தமாக கணவனும் மனைவியும் வெவ்வேறு இடத்தில் இருப்பார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கி சேமிப்புகள் உயரும். புதன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மாத மத்தியில் மூன்றாம் இடத்திற்கு பெயர்கிறார். தொழில்துறை அமோகமாக இருக்கும். கல்வித்துறையில் முன்னேற்றம் உண்டாகும். சிறு சிறு வியாபாரிகளுக்கு இது பொற்காலம். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். விவசாயிகள் பயிர் தொழிலுக்கு நிலங்களை தயார் படுத்துவார்கள். ஜென்ம குருவில் தான் ராமன் சீதையை பிரிந்தார். அதுபோல இந்த ராசிக்காரர்களும் பிரியலாம். வேலை நிமித்தமாக... தொழில் சம்பந்தமாக... வெளிநாட்டு வேலை காரணமாக இது நடக்கும். குருபகவான் லாபத்தோடு பிரித்து வைப்பார். லாபஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் எந்த தொழிலாக இருந்தாலும் லாபத்தை அள்ளிக் கொடுப்பார். வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் செல்வச்செழிப்பு அதிகரிக்கும்.இரண்டாம் இடத்தில் நிற்கும் ராகும் எட்டாம் இடத்தில் இருக்கும் கேதும் இல்லறத்தில் இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அது பெரிய அளவில் பாதிப்பை உண்டு பண்ணாது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459