SSLC Regular Students Nominal Roll Downloading and Correction Related Proceedings by DGE! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/03/2022

SSLC Regular Students Nominal Roll Downloading and Correction Related Proceedings by DGE!

மே -2022 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் அவரவர் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெயர் பட்டியலை ( Nominal Roll ) 04.01.2022 முதல் 19.01.2022 வரையிலான நாட்களில் பதிவேற்றம் செய்ய கால அவகாசமும் , 20.01.2022 முதல் 05.02.2022 வரை கூடுதலாக கால நீட்டிப்பும் வழங்கப்பட்டது.


இதன்படி தயாரிக்கப்பட்ட மே 2022 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர் பட்டியலை அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 10.03.2022 அன்று பிற்பகல் முதல் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளமான  http://www.dge.tn.gov.in-/ க்கு சென்று தங்கள் பள்ளிக்கென வழங்கப்பட்டுள்ள User Id மற்றும் Password -ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் , பெயர் பட்டியலில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் ( பெயர் , பிறந்த தேதி , தாய் , தந்தை / பாதுகாவலர் பெயர் , புகைப்படம் ) அத்திருத்தங்களை 11.03.2022 மற்றும் 12.03.2022 ஆகிய இரு நாட்களில் மேற்கொள்ளவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


2021 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவரேனும் ( Nominal Roll ) சேர்க்காமல் விடுபட்டிருப்பின் பெயர் பட்டியலில் சேர்ப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.



No comments:

Post a Comment