வறுமையின் அடையாளம் அல்ல, அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ் - ASIRIYAR MALAR

Latest

Education News

21/03/2022

வறுமையின் அடையாளம் அல்ல, அரசு பள்ளிகள் பெருமையின் அடையாளம்; அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறை சார்பில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவராசு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகம் முழுவதும் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் நண்பர்களாக இருக்க வேண்டும். இந்த பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் மாதம் ஒருமுறை ஒரு கூட்டம் நடத்தப்படும். பட்ஜெட்டில் ரூ.36,895.89கோடி கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளம் என மாற்றிக்காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர்கள் ஸ்டாலினின் வழிகாட்டுதல் படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளி மேலாண்மைகுழு கூட்டம் நடத்தப்பட்டது. திருச்சியில் மொத்தம் 1296 இடங்களில் நடைபெற்றது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதோடு வேலை முடிந்து விட்டது என்று இருந்துவிடாமல் குழந்தைகளின் கல்வி எப்படி உள்ளது? பள்ளி எப்படி உள்ளது போன்றவற்றை அவர்களுக்கு தெரியப்படுத்துவதே, கூட்டத்தின் முதன்மை நோக்கம் ஆகும் என்றார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459