TNPSC - விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவுடன் ஆதார் விவரங்களை கட்டாயம் இணைக்க வேண்டும். - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/02/2022

TNPSC - விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவுடன் ஆதார் விவரங்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் போட்டித் தேர்வை எழுத விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது ஒரு முறை நிரந்தர பதிவு எண்ணுடன் ஆதார் எண் குறித்த விவரங்களையும் கட்டாயம் இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலத்திற்கேற்ப தேவையான மாற்றங்களை அறிமுகம் செய்து அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறது. மேலும், தெரிவி முறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் பொருட்டும், போட்டித் தேர்வுகளை விரைவாக நிறைவுசெய்யும் வகையிலும், அவ்வப்போது சீர்திருத்தங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்தொடர்ச்சியாக, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தேர்வர்களும் தங்களது ஆதார் குறித்த விவரங்களை வரும் 28.02.2022 ஆம் தேதிக்குள் தவறாமல் இணைத்து எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டும் அறிவிக்கைகளின் அடிப்படையில் தனது ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்கு மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது குறித்த விளக்கம் ஏதேனும் தேவைப்படுமானால், 18004190958 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது helpdesk@tnpscexams.in/grievance.tnpsc@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459