தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2026 ஆண்டுக்கான (ஜனவரி-டிசம்பர்) மாணவர் சேர்க்கை தொடங்கியது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி திட்டத்தில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, மேலாண்மை, வர்த்தகம், சமூகவியல், சமூகப் பணி, பொருளாதாரம், பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 11 இளங்கலை படிப்புகளையும் 11 முதுகலை படிப்புகளையும் வழங்கி வருகிறது.
இவை தவிர, பல்வேறு பாடங்களில் 11 டிப்ளமா படிப்புகள், 12 சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 2026 ஆண்டுக்கான (ஜனவரி-டிசம்பர்) மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கப்பட்டது. இச்சேர்க்கையை பல்கலைக்கழக பதிவாளர் கு.இரா.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குநர் ஆர்.ஆறுமுகம், மாணவர் உதவி மற்றும் சேவைப் பிரிவு இயக்குநர் த.ரவிமாணிக்கம், பாடநூல் தயாரிப்பு மற்றும் விநியோகப் பிரிவு இயக்குநர் பா.பாண்டிய வடிவு ஆகியோர் பங்கேற்றனர்.
வெவ்வேறு பாடப் பிரிவுகள், அவற்றுக்கான அடிப்படைக் கல்வித் தகுதிகள், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) தெரிந்துக் கொள்ளலாம் என பதிவாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்



No comments:
Post a Comment