மறுபடியும் முதல்ல இருந்து ஸ்டார்ட்.. லாக்டவுன் அறிவித்த நெதர்லாந்து.. இனி இப்பிடித்தான்? - ஆசிரியர் மலர்

Latest

19/12/2021

மறுபடியும் முதல்ல இருந்து ஸ்டார்ட்.. லாக்டவுன் அறிவித்த நெதர்லாந்து.. இனி இப்பிடித்தான்?

 


ஓமிக்ரான் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் லாக்டவுன் மீண்டும் போடப்பட்டு வருகிறது. நெதர்லாந்து, யு.கேவில் பல்வேறு நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டு வருகிறது.2019 இறுதியில் சீனாவின் வூஹன் மாகாணத்தில் ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டது. முதலில் அங்கு கண்டறியப்பட்ட கேஸ்கள் பின் வேகமாக பல்வேறு நாடுகளுக்கு பரவியது. 2020 முழுக்க இந்த முதல் கட்ட கொரோனா பரவல்தான் உலக நாடுகளை முடக்கியது. உலகம் கண்டிராத மாபெரும் லாக்டவுன் அப்போது 120க்கும் மேற்பட்ட நாடுகளில் போடப்பட்டது. குட்டி குட்டி தீவுகளில் கூட கொரோனா கண்டறியப்பட்டு லாக்டவுன் போடப்பட்டது.டெல்டா2020 இறுதிக்கட்டத்தில்தான் டெல்டா பரவல் தொடங்கியது. 2020 போல மோசமாக இல்லாமல் 2021 நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்து வந்தவர்களுக்கு 2021 மிக மோசமான வருடமாக அமைந்தது. அதன்படி 2021 ஜனவரியில் இருந்தே பல்வேறு நாடுகளில் டெல்டா பரவ தொடங்கியது. முக்கியமாக யுகே, இந்தியா, அமெரிக்காவில் டெல்டாவின் தாக்கம் மோசமாக இருந்தது.2021 டெல்டா2021ம் வருடம் மொத்தத்தையும் டெல்டா கபீளீகரம் செய்தது. அதிலும் 2020ல் பரவிய வூஹன் வகை கொரோனாவை விட டெல்டா மிக வேகமாக பரவியது. அதிக மரணங்களை ஏற்படுத்தியது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 4 லட்சத்தை தொட இது மிக முக்கியமான காரணமாக இருந்தது. 2021 பாதிக்கு பின் டெல்டாவின் வேகம் குறைந்த நிலையில் 2022லாவது உலகம் இந்த பாதிப்பில் இருந்து விடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.2022 ஓமிக்ரான்ஆனால் 2022ல் அதைவிட மோசமான ஒருவகை உருமாறிய கொரோனாவான ஓமிக்ரான் கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இதன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வரும் நாட்களில் மிக பெரிய அளவில் கேஸ்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2022ல் ஓமிக்ரான் கொரோனாதான் அதிக ஆதிக்கம் கொண்ட கொரோனாவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உலக சுகாதார மையம்ஓமிக்ரான் காரணமாக யு.கே, மத்திய ஆசிய நாடுகள், தெற்கு ஆசிய நாடுகளில் பிப்ரவரியில் மிக அதிக அளவில் கேஸ்கள் பதிவாகும் என்று முன்பே உலக சுகாதார மையம் எச்சரிக்கையும் விடுத்து இருந்தது. இந்த நிலையில் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தற்போது கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால் நெதர்லாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் ரூட்டே அறிவிப்பு வெளியிட்டுள்ளார் .லாக்டவுன்அதேபோல் நியூசிலாந்தில் மிக கடுமையான லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. யு.கேவில் மொத்தமாக லாக்டவுன் கொண்டு வரப்படவில்லை. ஆனால் இதில் இருக்கும் நாடுகளில் தனிப்பட்ட வகையில் லாக்டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ்துக்கு முன்பாக கொரோனா கேஸ்கள் அதிகரிக்க கூடாது என்பதால் அதுவரை லாக்டவுன் போடப்பட்டுள்ளது.வெளிநாடுஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, ஜப்பான், சிங்கப்பூர்,மலேசியா , மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் வெளிநாட்டு பயணிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடுமையான உள்நாட்டு, மற்றும் எல்லை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஓமிக்ரான் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் லாக்டவுன் மீண்டும் போடப்பட்டு வருகிறது. இதனால் 2022ம் கொரோனாவோடு சென்று விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459