எட்டிப்பார்த்த லோக்கல் பரவல்.. இந்தியாவில் ரெக்கார்ட் படைத்த ஓமிக்ரான்- ஒரே நாளில் இத்தனை கேஸ்களா! - ஆசிரியர் மலர்

Latest

19/12/2021

எட்டிப்பார்த்த லோக்கல் பரவல்.. இந்தியாவில் ரெக்கார்ட் படைத்த ஓமிக்ரான்- ஒரே நாளில் இத்தனை கேஸ்களா!


இந்தியாவில் ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் 146 ஓமிக்ரான் கேஸ்கள் இருந்தாலும் இதுவரை ஓமிக்ரான் காரணமாக திடீரென கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 34,733,194 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் லேசாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 7145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 477,158 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 289 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 34,162,765 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 93,271 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.நேற்று எத்தனைநேற்று ஒரே நாளில் 30 பேருக்கு இந்தியாவில் ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவில் ஒரே நாளில் பதிவான அதிக அளவு ஓமிக்ரான் கேஸ்கள் ஆகும் . நேற்று தெலுங்கானா, மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஓமிக்ரான் கேஸ்கள் மேலும் பதிவானது. இந்தியா ஓமிக்ரான்இதற்கு முன் கடந்த வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 24 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவானது. இதுவே ஒரே நாளில் பதிவான அதிக கேஸ்களாக இருந்தது. அதை முறியடித்து நேற்று ஒரே நாளில் 30 ஓமிக்ரான் கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது.ஓமிக்ரான் கேஸ்கள் எண்ணிக்கைதமிழ்நாட்டில் தற்போது வரை ஒரே ஒரு ஓமிக்ரான் கேஸ் மட்டுமே உள்ளது. 12 வெளிநாட்டு பயணிகளுக்கு நேற்று தெலுங்கானாவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்டது. இதனால் அங்கு ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்று மகாராஷ்டிராவில் 8 கேஸ்கள் பதிவானது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 48 ஆக உயர்வு.ஓமிக்ரான் மகாராஷ்டிராநேற்று பதிவான கேஸ்களில் 4 கேஸ்கள் லோக்கல் கேஸ்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 2 மும்பையில் பதிவானது. இந்தியாவில் லோக்கல் ஓமிக்ரான் கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக பதிவாக தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் நேற்று 6 புதிய ஓமிக்ரான் கேஸ்கள் கண்டறியப்பட்டன. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு 14 ஆக உயர்வு.கர்நாடகா ஓமிக்ரான்இதில் 5 ஓமிக்ரான் கேஸ்கள் டக்சின் கன்னடாவில் இருக்கும் கல்வி நிறுவனம் ஒன்றில் பதிவானது. அதேபோல் கேரளாவிலும் 4 புதிய ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளது. அங்கு இதனால் மொத்த ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரம், மலப்புரம் மற்றும் திருச்சூரில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459