TNPSC தேர்வெழுத விண்ணப்பிப்போர்க்கு முக்கிய அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

25/11/2021

TNPSC தேர்வெழுத விண்ணப்பிப்போர்க்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தால் நடப்பு ஆண்டிற்கான துறைத்தேர்வு 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. கணினியில் வழியில் நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அவரின் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

TNPSC:

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிபணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்த துறைகளுக்கேற்ப குருப் 1, குரூப் 2 , குரூப் 4, மற்றும் ஆசிரியர்களுக்கான டெட் மற்றும் டிஆர்பி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் நேர்முக தேர்வில் பங்கு பெற்று சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பிறகு பணி ஆணை வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித தேர்வுகளும் அரசு போட்டி தேர்வுகளும் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் வருடம் தோறும் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு நடக்க வேண்டிய துறைத்தேர்வு நடைபெற வேண்டிய துறைத்தேர்வு 2022ம் ஆண்டு பிப்ரவரி 1 முதல் 9 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கணினி வழி துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் மேலும் வணிகவரித்துறை மற்றும்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சி துறைக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம்‌ இணைப்பு II-ல்‌ வெளியிடப்பட்டுள்ளது. தேர்வின் பெயர், தேர்வு குறியீடு, தேர்வுக்கான கட்டணம், கால அட்டவணை ஆகிவை குறித்து இணையதளமான https://www.tnpsc.gov.in/ மற்றும் http://www.tnpscexams.net/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் துறை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 21.11.2021 கடைசி தேதியாகும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459