அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்று சமர்ப்பிப்பு! இன்னும் 5 நாட்கள் தான்! - ஆசிரியர் மலர்

Latest

25/11/2021

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்று சமர்ப்பிப்பு! இன்னும் 5 நாட்கள் தான்!

அனைத்து ஓய்வூதியம் பெரும் ஓய்வூதியதாரர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றானது நவம்பர் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்க மறந்தால் ஓய்வூதியம் நிறுத்தம் செய்யப்படும்.


ஆயுள் சான்று:



நாடு முழுவதும் ஓய்வூதியம் பெரும் அனைத்து அரசு ஊழியர்களும் தங்களது இருப்பை உறுதிசெய்யும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் சமபிக்க வேண்டும். இந்த ஆயுள் சான்றானது முன்பு வங்கி அல்லது அஞ்சல் துறைக்கு நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு இருந்தது. ஆனால் தற்போது அவர்கள் வீட்டிலிருந்தே டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்று சமர்ப்பிக்கும் வசதியை அரசு செயல்படுத்தியுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர் https://jeevanpramaan.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்களது விபரங்களை கொடுத்து ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்துக்கொள்ளலாம்.



அவ்வாறு இல்லையெனில் தபால்காரர் உதவியுடன் டிஜிட்டல் பயோமெட்ரிக் முறையில் ஆயுள் சான்று சமர்ப்பித்துக்கொள்ளலாம். இவை அனைத்தையும் தாண்டி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வீடியோ கால் மூலம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுவது குறித்த குறிப்பிட்ட விபரங்களை அளிப்பது மூலம் பொது இ சேவை மையங்களில் ஆயுள் சான்று எடுத்துக்கொள்ளலாம்.



இத்தகைய ஆயுள் சான்று ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் இறுதிக்குள் உரிய வங்கி அல்லது அஞ்சல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் தற்போது இந்த ஆண்டிற்கான ஆயுள் சான்று சமர்பிப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. அதாவது நவ.30ம் தேதிக்குள் ஆயுள் சான்று சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளது. அதனால் அனைத்து அரசு பணி ஓய்வூதியதாரர்களும் விரைந்து ஆயுள் சான்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459