Go.113 அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல் - ஆசிரியர் மலர்

Latest

18/10/2021

Go.113 அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல்

 பொதுப்பணிகள் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழான அறிவிப்பு - 2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலம் - பணிக்காலமாக முறைப்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. 


மனித வள மேலாண்மைத் (கே) துறை 

அரசாணை (நிலை) எண்.113 நாள் 13.10.2021 பிலவ, புரட்டாசி-27, திருவள்ளுவர் ஆண்டு 2052. 

படிக்க: 

1. அரசுக் கடித எண்.23689/கே.1/2017-1 மற்றும் 2, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை, நாள் 17.08.2017 மற்றும் 07.09.2017. 

2. அரசுக் கடித எண்.23689/கே.1/2017.6, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை, நாள் 27.09.2017. அரசுக் கடித எண்.38148/கே.1/2018-11 மற்றும் 13, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை, நாள் 18.01.2019 மற்றும் 24.01.2019. அரசாணை (நிலை) எண்.9, பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் (கே) துறை, நாள் 02022021. 

ஆணை: 

கடந்த 2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில், சில அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வேலை நிறுத்தப் போராட்ட காலங்களுக்கு, 'பணிபுரியவில்லை என்றால் ஊதியமில்லை" என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை. மேலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும், குற்றவியல் வழக்குகளும் தொடரப்பட்டன. (த.பி.பா) 

 - 2

 2 2019-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகளை மட்டும் கைவிட மேலே நான்காவதாக படிக்கப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டன. 

3. இந்நிலையில், மேற்குறிப்பிட்ட ஆண்டுகளில் நடத்தப்பட்ட வேலை நிறுத்தப் போராட்டக் காலங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தற்காலிகப் பணிநீக்கக் காலம் ஆகியவற்றை பணிக்காலமாக முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பணியாளர் சங்கங்கள் அரசுக்கு முன்வைத்து வந்தன. 

4. அதனைத் தொடர்ந்து, 07.09.2021 அன்று நடைபெற்ற சட்டமன்றப் பேரவை கூட்டத்தில், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன:- 

2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் முந்தைய அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டங்கள் தொடர்பாக, பல்வேறு சங்கங்கள் தங்கள் வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலத்தினைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனைப் பரிவுடன் பரிசீலித்து, பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுடைய வேலை நிறுத்தக் காலம் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலம் ஆகியவை பணிக் காலமாக முறைப்படுத்தப்படும். வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அதே இடத்தில் மீண்டும் பணியமர்த்தும் வகையில், கலந்தாய்வின் போது அவர்களுக்கான உரிய முன்னுரிமை வழங்கப்படும். மேலும், போராட்டக் காலத்தில் அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படும். அந்த ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக பதவி உயர்வு ஏதேனும் பாதிக்கப்பட்டிருந்தால், அவையும் சரி செய்யப்படும். 

5. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்காணும் அறிவிப்பிற்கிணங்க, பின்வரும் ஆணைகள் வெளியிடப்படுகின்றன :- (i) 2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் (10.022016 முதல் 19.022016 வரை, 22082017 (ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்), 07.09.2017 முதல் 15.09.2017 வரை மற்றும் 22.01.2019 முதல் 30.01.2019 வரை) பணிக்காலங்களாக முறைப்படுத்தப்படுகின்றன: 




.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459