பள்ளி மாணவர்கள் விடுதி.. கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் என்னென்ன?.. கல்வித்துறை உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

 




23/10/2021

பள்ளி மாணவர்கள் விடுதி.. கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு முறைகள் என்னென்ன?.. கல்வித்துறை உத்தரவு!

 சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஆதிக்கம் இருந்ததால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு ம் மதிப்பெண்களும் வழங்கப்பட்டன.இதனை தொடர்ந்து கொரோனா கட்டுக்குள் வந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வகுப்புகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.தமிழ்நாட்டில் நவம்பர் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. கூடுதல் தளர்வுகள் என்னென்ன?.. முழு விவரம்பள்ளிகள் திறப்புஇந்த நிலையில் நவம்பர் மாதம் 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு மாணக்கர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது. இதனால் பள்ளிகளில் ஏற்பாடுகள் தயாராகி கொண்டிருக்கின்றன. விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக விடுதிகளும் திறக்கப்பட உள்ளன.வழிகாட்டு நெறிமுறைகள்இந்த நிலையில் பள்ளி விடுதிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- அனைத்து விடுதிகளில் நுழைவு பகுதியில் இரண்டு கிருமிநாசினி பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவிய பின்னரே விடுதிக்குள் வருவதையும் விடுதியில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் தங்கி கல்வி பயில்வதையும் காப்பாளர்கள் உறுதி செய்திடல் வேண்டும்.விழிப்புணர்வு வழங்க வேண்டும்ஒவ்வொரு விடுதி நுழைவு வாயிலிலும் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை எடுத்து அதற்குரிய பதிவேடு ஏற்படுத்திபதிவு செய்யப்பட வேண்டும் இதனை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் ஆய்வு செய்தல் வேண்டும். தன் சுத்தம் மற்றும் பெருந்தொற்று தடுப்பு பாதுகாப்பு அணுகுமுறைகள் குறித்து தேவையான விழிப்புணர்வினை வழங்கிட வேண்டும்.சுகாதாரமான சூழல்விடுதி வளாகங்களை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். மழைக்காலங்களில் விடுதி வளாகத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதையும் பள்ளங்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாக வண்ணம் விடுதிகளில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விடுதி வளாகத்தில் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து விடுதி வளாகம் சுகாதாரமான சூழலில் செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள்விடுதியில் உள்ள அனைத்து மின் சாதனங்களையும் நன்முறையில் பராமரித்து மழைக்காலங்களில் நீர் கசிவினால் மின் கசிவு ஏதும் ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். விடுதி மாணவர்கள் அவசியமின்றி விடுதியிலிருந்து தங்கள் இல்லங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும். நீண்ட இடைவெளிக்கு பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பில் பங்கு பெறுவதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி இறுதியில் அணுகுவதற்கு தேவையான நடவடிக்கைகள் நேர்மறை சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தவும் உரிய ஆலோசனைகளை வழங்கி விடுதி சூழல் இனிமையானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றப்படுவதை விடுதி காப்பாளர்கள் உறுதி செய்திடல் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459