அரியர் தேர்வு எழுதாமல் எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது!: ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




23/10/2021

அரியர் தேர்வு எழுதாமல் எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது!: ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவு.

  .com/


அரியர் தேர்வு எழுதாமல் எந்த மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருகிறது. கொரோனா தொற்று பரவலை அடுத்து தமிழகத்தில் அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசானது அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். மேலும் அரியர் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையும் எதிர்த்திருந்தனர்.

இந்த நிலையில் வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரியர் தேர்வு மாணவர்களுக்கு இரு துணை தேர்வுகள் நடத்தப்பட்டதாகவும், அரியர் தேர்வுகளை ரத்து செய்த அரசாணையை அமல்படுத்தவில்லை என்றும் தேர்வு எழுதாமல் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் இறுதி பருவ தேர்வுகளையும், இடைப்பட்ட பருவ தேர்வுகளையும் நடத்தவில்லை என பல்கலைக்கழக மானிய குழு விதிகளை வகுத்துள்ளதாக பல்கலைக்கழக மானிய குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். மேலும் தேர்வு எழுதாமல் எந்த மாணவருக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459