இனி வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள் வீடியோக்களை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையிலான புதிய வசதி - ஆசிரியர் மலர்

Latest

09/08/2021

இனி வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள் வீடியோக்களை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையிலான புதிய வசதி

 ஒருமுறை மட்டுமே புகைப்படங்களை பார்க்க முடியும்!



இனி வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள் வீடியோக்களை ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையிலான புதிய வசதியை வாட்ஸப் அறிமுகம் செய்து உள்ளது

வாட்ஸ் அப் பயனர்களின் தனி உரிமையை பாதுகாக்கும் வகையில் ’வியூ ஒன்ஸ்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த வசதியை பயன்படுத்தி அனுப்பப்படும் போட்டோக்கள் வீடியோக்களை மற்றொருவர் ஒரே ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்.

ஒரு முறை போட்டோவை ஓபன் செய்து பார்த்துவிட்டு குறிப்பிட்ட வெளியே வந்து விட்டால் அந்த புகைப்படம் தானாகவே மறைந்துவிடும். 

மேலும் அந்த புகைப்படங்களை வேறு ஒருவருக்கு பார்வர்டு செய்யவும் முடியாது

ஆனால் அந்த புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொள்ள எந்த தடையும் இல்லை என வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

வாட்ஸ் அப் நிறுவனத்தின் இந்த புதிய வசதிக்கு வாடிக்கையாளர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் 


வாட்ஸ்அப்பில்  ‘வியூ ஒன்ஸ்’ புகைப்படம் வீடியோ அனுப்புவது எப்படி?


முதலில் உங்கள் வாட்ஸ்-அப்பை பிளே ஸ்டோர் சென்று அப்டேட் செய்யுங்கள்


அடுத்து வாட்ஸப்பில் நீங்கள் எந்த புகைப்படம் ,அல்லது வீடியோ அனுப்பவேண்டுமோ அதனை கேலரிக்குச் சென்று, உங்கள் தேர்ந்தெடுக்கவும் 

அடுத்து செண்ட் பட்டன் அருகில் கடிகாரம் போன்ற ஐகானைக் காண்பீர்கள், ‘வியூ ஒன்ஸ்’ அம்சத்தை இயக்க அதை க்ளிக் செய்யவும். 

நீங்கள் அதை இயக்கியவுடன், “புகைப்படம் ஒரு முறை பார்க்க அமைக்கப்பட்டது” என்று ஒரு செய்தியை பயன்பாடு காண்பிக்கும். அதன்பின்னர், வீடியோ அல்லது புகைப்படங்களை நீங்கள் அனுப்பலாம்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459