என்எல்சியில் . 675 காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

என்எல்சியில் . 675 காலிப்பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க!

 சென்னை: இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புதிய அறிவிப்பின்படி பிட்டர், டர்னர், மெக்கானிக் (Motor Vehicle/ Diesel/ Tractor/ Electrician/ Wireman, Carpenter, Plumber, Stenographer, Welder, PASAA, Accountant, Data Entry Operator, Assistant (HR)) ஆகிய பணிகளுக்கு 12 மாதங்கள் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்க மொத்தம் 675 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


எனவே இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருநது விண்ணப்பங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டு வழிகள் மூலமும் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதி பெற்ற நபர்கள் ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பிறகு கையொப்பமிட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைந்து ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் பரிந்துரைக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்வில் வெற்றி பெற்றால் நெய்வேல் என்எல்சியில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் அறிவிப்பு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மாத ஊதியமாக ரூ 8,766 முதல் 12,524 ரூபாய் வரை வழங்கப்படும். மேற்கண்ட பிரிவுகளில் PASAA பணிக்கு ரூ 8,766 மாத ஊதியமாகவும் Accountant, Data Entry Operator, Assistant ஆகிய பணிகளுக்கு ரூ 12,524 ஊதியமாகவும் மற்ற பிரிவுகளுக்கு ரூ 10,019 ஊதியமாகவும் வழங்கப்படுகிறது.


No comments:

Post a Comment