தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு.

 **ஊடகச் செய்தி
மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 15/2021 நாள் : 22.08.2021**

**திருத்தணியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தேர்தல் / புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு**.


தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தேர்தல் 22.08.2021 ஞாயிறு அன்று திருத்தணியில் ஸ்ரீ ராதா கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையாளராக சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் செ.பாலச்சந்தர், துணைத் தேர்தல் ஆணையராக முன்னாள் மாநில துணைத் தலைவர் திரு.டி.வெங்கடேசன் ஆகியோர் பணியாற்றினர்.

தேர்தலில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான மாநில நிர்வாகிகள் கீழ்கண்டவாறு தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் மாநிலத் தலைவராக மூ.மணிமேகலை (திருநெல்வேலி), பொதுச்செயலாளராக ச.மயில் (தூத்துக்குடி), மாநிலப் பொருளாளராக J.மத்தேயூ (செங்கல்பட்டு), துணைப் பொதுச்செயலாளராக தா.கணேசன் (திண்டுக்கல்), இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினராக தோ. ஜாண் கிறிஸ்துராஜ் (திருப்பூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், மாநிலத் துணைத் தலைவர்களாக சேவியர் (கன்னியாகுமரி), ஆரோக்கியராஜ் (சிவகங்கை), M.K.முருகன் (திண்டுக்கல்), ரவிச்சந்திரன் (தஞ்சாவூர்), அருள் சுந்தர ரூபன் (ஈரோடு), அ. ரஹீம் (கள்ளக்குறிச்சி), ரஞ்சன் தயாள தாஸ் (வேலூர்), பெ.அலோசியஸ் துரைராஜ் (செங்கல்பட்டு), அமுதவல்லி (ராணிப்பேட்டை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலச் செயலாளர்களாக பிரம்மநாயகம் (திருநெல்வேலி), தே.முருகன் (மதுரை), சகிலா (கரூர்), வீரமணி (திருவாரூர்), சுனில்குமார் (நீலகிரி), கிறிஸ்டோபர் (கடலூர்), டேவிட் ராஜன் (திருவண்ணாமலை), கிருஷ்ணன் (திருவள்ளூர்), சி.ஜி. பிரசன்னா (திருவள்ளூர்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


மாநில தேர்தலுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவள்ளூர் மாவட்டக் கிளையின் தலைவர் சுவர்ணாபாய், செயலாளர் முருகன், பொருளாளர் பாலசுந்தரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாரக் கிளைகளின் நிர்வாகிகள் செய்திருந்தனர். தேர்தலில் மாநிலம் முழுவதுமிருந்து மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இப்படிக்கு,
(ச. மயில்)
பொதுச்செயலாளர்


திருத்தணி.
22.08.2021


No comments:

Post a Comment