நீட்' தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள்.. மிக குறைவாக விண்ணப்பம் - தமிழ்நாடு கல்வித்துறை - ஆசிரியர் மலர்

Latest

06/08/2021

நீட்' தேர்வில் ஆர்வம் காட்டாத அரசு பள்ளி மாணவர்கள்.. மிக குறைவாக விண்ணப்பம் - தமிழ்நாடு கல்வித்துறை

 சென்னை: தமிழ்நாட்டில் 6,412 பேர் மட்டுமே இதுவரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு மிக குறைவாக விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. மருத்துவ படிப்பில் சேருவதற்கான 'நீட்' என்னும் நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்த்து தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலிறுத்தினார். இதேபோல் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலிறுத்தினார். அறிக்கை சமர்ப்பித்த குழுமேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் மு.க. ஸ்டாலின். இதனை தொடர்ந்து இது தொடர்பாக ஆய்வு செய்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு முதல்வரிடம் தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தது.நீட் தேர்வு தேவையில்லைமருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு தேவையில்லை எனவும், மாநில அரசின் 85 விழுக்காட்டு இடங்களுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தேவைப்பட்டால் மாநில அரசே நீட் தேர்வு நடத்தி கொள்ளலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் தமிழ்நாடு மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தெரியவந்தது.குறைவான விண்ணப்பம்குறைவான விண்ணப்பம்இந்த ஆண்டு 'நீட்' தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில்படித்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு மிக குறைவாக விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 6,412 பேர் மட்டுமே இதுவரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.மதுரை அதிகபட்சம்அதிகபட்சமாக மதுரையில் 505 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். குறைந்த பட்சமாக ராமநாதபுரத்தில் 9 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். கரூர், புதுக்கோட்டை உள்பட ஒருசில மாவட்டங்களில் ஒரு அரசு பள்ளி மாணவர் கூட நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வில்லை என்றும் கல்வித்துறை கூறியுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வு மீதான பயம் அதிகமாக இருப்பதாகவும், இதன் காரணமாகவே பெரும்பாலான மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்னப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது.,, 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459