ஐடிபிஐ வங்கியில் 920 எக்ஸிகூட்டிவ் பணிகள் காலி.. கடைசி தேதி ஆகஸ்ட் 18 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஐடிபிஐ வங்கியில் 920 எக்ஸிகூட்டிவ் பணிகள் காலி.. கடைசி தேதி ஆகஸ்ட் 18

 சென்னை: ஐடிபிஐ வங்கியில் 920 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வங்கி பணிகளுக்காக நிறைய இளைஞர்கள் தங்களை தேர்வுக்கு தயார்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியில் 920 எக்ஸிகூட்டிவ் பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.ஏதாவது ஒரு துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதல் ஆண்டு மாதந்தோறும் ரூ 29 ஆயிரமும் , இரண்டாவது ஆண்டு மாதந்தோறும் ரூ 31 ஆயிரமும், மூன்றாவது ஆண்டு மாதந்தோறும் ரூ 34 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ200, மற்ற அனைத்துப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் ரூ 1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 18. மேலும் விவரங்கள் அறிய Click here to job notification

. இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

No comments:

Post a Comment