அடுத்த மாதம் 3வது அலை? 2 லட்சம் ஐசியு படுக்கைகள் தேவை.. இல்லையென்றால் கஷ்டம்தான்.. நிதி ஆயோக் ஷாக் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

22/08/2021

அடுத்த மாதம் 3வது அலை? 2 லட்சம் ஐசியு படுக்கைகள் தேவை.. இல்லையென்றால் கஷ்டம்தான்.. நிதி ஆயோக் ஷாக் தகவல்

 

டெல்லி: இந்தியாவில் வரும் காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 23% வரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படலாம் என்பதால் நாடு முழுவதும் இரண்டு லட்சம் ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என நிதி ஆயோக் மத்திய அரசுக்குப் பரிந்துரை அளித்துள்ளது.இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கிய கொரோனா 2ஆம் அலை மார்ச் - ஏப்ரல் மாதங்களில் உச்சம் தொட்டது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது.அந்த சமயத்தில் நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோ.யாளிகளால் நிரம்பின. அந்த சமயத்தில் ஒருபுறம் கொரோனாவாலும் மறுபுறம் சரியான நேரத்தில் படுக்கை கிடைக்காமலும் நோயாளிகள் உயிரிழந்தனர்.கொரோனா 2ஆம் அலைகொரோனா 2ஆம் அலை நாட்டில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. டெல்டா கொரோனா பாதிப்பால் வைரஸ் வேகமாகப் பரவியது என்றாலும்கூட தேவையான முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தவறியதாலேயே உயிரிழப்புகள் அதிகரித்தாக எதிரக்கட்சிகள் விமர்சித்தனர். வேக்சின் ஏற்றுமதிக்கு அனுமதி அளித்தது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்காமல் விட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் மத்திய அரசின் மீது சுமத்தப்பட்டது.மீண்டும் கொரோனாஇந்நிலையில் கொரோனா அடுத்த அலை குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. சில ஆய்வாளர்கள் கொரோனா 3ஆம் அலை மிக மோசமானதாக இருக்கும் என எச்சரித்துள்ளனர். அதேநேரம் பெரும்பாலான ஆய்வாளர்கள் 2ஆம் அலை அளவுக்கு 3ஆம் அலை மோசமாக இருக்காது என்றே குறிப்பிட்டுள்ளனர், இந்தச் சூழலில் அடுத்து வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு குறித்தும் கொரோனா படுக்கைகளின் தேவை எந்தளவு அதிகரிக்கும் என்பது குறித்தும் மத்திய அரசுக்கு நிதி ஆயோக் கடந்த மாதம் அளித்த பரிந்துரை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.2 லட்சம் ஐசியு படுக்கைகள்தினசரி கொரோனா பாதிப்பு நான்கு முதல் ஐந்து லட்சம் வரை உயரும்பட்சத்தில் எத்தனை படுக்கைகள் தேவை என்பதை நிதி ஆயோக் கணக்கிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவார்களில் சுமார் 23% பேருக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படலாம் என்பதால் அடுத்த மாதத்திற்கு நாடு முழுவதும் 2 லட்சம் ஐசியு படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவற்றில் 1.2 லட்சம் ஐசியு படுக்கைகளில் வென்டிலேட்டர் வசதி தேவை.நிதி ஆயோக் பரிந்துரைஇது தவிர ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 5 லட்சம் படுக்கைகள் உட்பட 7 லட்சம் சாதாரண கொரோனா படுக்கைகள் மற்றும் 10 லட்சம் கொரோனா தனிமைப்படுத்தும் படுக்கைகள் தேவைப்படலாம் என மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை அளித்துள்ளது. கடந்த காலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் அவற்றில் எத்தனை சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அட்மிட் ஆனார்கள், அவர்களில் எத்தனை பேருக்கு ஐசியு உதவி தேவைப்பட்டது என்பதைக் கொண்டு இது கணிக்கிடப்பட்டுள்ளது.ஆய்வு முடிவுகள் நம்பிக்கை அளிக்கிறது | .|கொரோனா பாதிப்புகடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை இருந்தது. குறிப்பாகக் கடந்த ஜூன் 1ஆம் தேதி ஆக்டிவ் கேஸ்கள் 18 லட்சத்தைத் தாண்டியது. அந்த சமயத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21.74% பேருக்கு மருத்துவமனைகளில் அட்மிட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் 2.2% பேருக்கு ஐசியு சிகிச்சை தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459