பெங்களூருவில் அச்சுறுத்தும் கொரோனா... 11 நாட்களில் 543 குழந்தைகளுக்கு பாதிப்பு - 3வது அலை பாதிப்பா? - ஆசிரியர் மலர்

Latest

13/08/2021

பெங்களூருவில் அச்சுறுத்தும் கொரோனா... 11 நாட்களில் 543 குழந்தைகளுக்கு பாதிப்பு - 3வது அலை பாதிப்பா?

 பெங்களூரு: கொரோனா 3வது அலை பெங்களூருவில் வீசத்தொடங்கியுள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 11 நாட்களில் 543 குழந்தைகளுக்‍கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தியாவில் முதலாவது அலை கொரோனா பரவலைவிட, 2வது அலை பரவல் தீவிரமாக பரவ தொடங்கியது. இதனால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டது. கொரோனா 2வது அலை பரவல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை தாக்கும் வீரியம் கொண்டதாக உள்ளதால் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது.கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாக பெங்களூருவில் வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம் என்றும் கடந்த 1ம் தேதியில் இருந்து 11ம் தேதிக்குள் பெங்களூருவில் 18 வயதுக்கும் குறைவான 543 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கர்நாடகா சுகாதாரத்துறை கூறியுள்ளது.இதில் 88 குழந்தைகள் 9 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 450 குழந்தைகள் 10 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 5 நாட்களில் 263 குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதனால் கொரோனா மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. கர்நாடகாவில் ஆகஸ்ட் இறுதியில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகளை திறக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு நிபுணர் குழு அதிகாரிகள் குழந்தைகளுக்கு தொற்று பரவாமல் தடுப்பது குறித்தும் உரிய சிகிச்சை வசதிகளை உருவாக்குவது தொடர்பாக நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது, பள்ளிகள் திறப்பதை ஒத்திவைப்பது, குடியிருப்புகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் பரவல் சில நாட்களில் 3 மடங்கு பரவும் பெரும் ஆபத்து உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு குறைவாக இருக்கும் என்பதால் அவர்களை வீட்டிற்குள் வைத்து பாதுகாப்பது மட்டுமே கொரோனா பரவலில் இருந்து தடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.கர்நாடக அரசு ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது, மேலும் கேரளா-கர்நாடகா, மகாராஷ்டிரா-கர்நாடக எல்லைகளுக்குள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் சோதனையை 72 மணி நேரத்திற்குள் எடுத்துள்ளவர்கள் மட்டுமே மாநிலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள்.இதனிடையே இன்னும் சில ஆண்டுகளில் குழந்தைகள் நோயாக கொரோனா மாறும் என்று அமெரிக்க நார்வே குழு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தீவிரம் பொதுவாக குழந்தைகளிடையே குறைவாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மற்ற பொதுவான குளிர்கால காய்ச்சல் வைரஸ்களை போல கொரோனா மாறும். இன்னும் தடுப்பூசி போடப்படாத அல்லது வைரஸால் பாதிக்கப்படாத சிறு குழந்தைகளை பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459