உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் வெளிக்காட்டும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் - ஆசிரியர் மலர்

Latest

19/07/2021

உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால் வெளிக்காட்டும் சில ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள்

 


▪️கொலஸ்ட்ரால் என்பது முற்றிலும் மோசமானது அல்ல. இது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மெழுகு, கொழுப்பு போன்ற பொருள். இது சில முக்கியமான உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கை வகிக்கிறது. 


▪️இத்தகைய கொலஸ்ட்ரால் செல் சவ்வுகள், குறிப்பிட்ட ஹார்மோன்கள் மற்றும் வைட்டமின் டி உருவாக்கத்திற்கு உதவுகிறது. இந்த கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. அவை HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால். 


இதில் இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் தான், அது உயர் கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த வகையான கொலஸ்ட்ரால் தமனிகளின் சுவர்களில் படிந்து தேங்க ஆரம்பிக்கின்றன. 


▪️ஒருவரது இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதோடு ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது குறிப்பிட்ட அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை கூர்மையாக கவனித்து, வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை சரியான நேரத்தில் செய்வதன் மூலம், உயிருக்கு ஏற்படும் ஆபத்தைத் தடுக்கலாம். 


 ▪️பெரும்பாலும் கொலஸ்ட்ரால் உடலில் அதிகமாக இருந்தால், அது மூன்று பகுதிகளில் அறிகுறிகளை நமக்கு வெளிக்காட்டும். கீழே அந்த மூன்று அறிகுறிகள் என்ன என்பதையும், உயர் கொலஸ்ட்ரால் எப்படி இயற்கையாக குறைப்பது என்பதையும் காண்போம்.


▪️ கைகளில் வலி - தமனிகளின் உட்புறத்தில் கொழுப்புக்கள் குவிந்திருக்கும் போது, கொலஸ்ட்ரால், கொழுப்புப் பொருட்கள், செல்லுலார் கழிவுப் பொருட்கள், கால்சியம் மற்றும் ஃபைப்ரின் ஆகியவற்றால் ஆன ஒரு கட்டி உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாகும் கட்டிகள் இரத்த ஓட்டத்தில் தடை மற்றும் இடையூறை ஏற்படுத்துகிறது. இது தான் பெருந்தமனி தடிப்பு அழற்சி என்னும் நிலையை உண்டாக்குகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் கைகளில் வலியை உணரக்கூடும். ஸ்டெம் செல் சிகிச்சை பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்!


👉 சருமத்தில் வளர்ச்சி  


▪️திடீரென்று மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தில் வளர்ச்சியைக் கண்டால், உங்கள் சருமத்தின் கீழ் கொழுப்புக்கள் தேங்கி இருக்கலாம். 


ஒருசிலருக்கு கண்களின் கீழே கோடுகளைக் காணலாம். 


▪️இந்த வலியற்ற தேக்கங்கள் உங்கள் உள்ளங்கைகளிலோ அல்லது உங்கள் கால்களின் பின்புறத்திலோ தென்படலாம். இம்மாதிரியான வளர்ச்சிகளை நீங்கள் உங்கள் உடலில் கண்டால், உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். உங்க தொப்பை கொழுப்பு குறையாம இருக்குறதுக்கு... நீங்க செய்யுற இந்த தப்புதான் காரணமாம்...! நீல நிற வளையம் சிலருக்கு, கார்னியாவின் வெளிப்பகுதிக்கு மேலேயும், கீழேயும் நீல நிற அல்லது சாம்பல் நிற அல்லது வெள்ளை நிற வளையம் நன்கு தெளிவாக காணப்படும். 


▪️இந்நிலை 'ஆர்கஸ் செனிலிஸ்' என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக இது வயதானதற்கான ஒரு சாதாரண அடையாளமாக கருதப்படுகிறது. இருப்பினும் இந்நிலை 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் போது, இதற்கு ஹைப்பர்லிபிடெமியா காரணமாகும் மற்றும் இது பெரும்பாலும் இதய நோய் அபாயத்துடன் தொடர்புடையது. கொரோனா இருக்கா? உடம்பில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கணுமா?


📌இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க... கொலஸ்ட்ராலைக் குறைக்கும் 


✴️இயற்கை வழிகள்! 


▪️ஒருவருக்கு உடல் பருமன், வயது, குடும்ப வரலாறு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டது என பல காரணிகளால் கொலஸ்ட்ரால் அதிகமாகலாம். இப்படி அதிகரித்துள்ள கொலஸ்ட்ராலை ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் மூலமும், அன்றாடம் உடற்பயிற்சிகளை செய்து வருவதன் மூலமும் குறைக்கலாம். 


இப்போது உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில இயற்கை வழிகளைக் காண்போம். மஞ்சள் தமனிச் சுவர்களில் படிந்துள்ள கொழுப்புக்கட்டிகளைக் கரைக்கமஞ்சள் உதவும். 


அதற்கு அன்றாட உணவில் மஞ்சளை சேர்த்துக் கொள்வதோடு, இரவு தூங்கும் முன் மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கவும் செய்யலாம். இன்னும் சிறப்பான வழி என்றால், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 


பூண்டு பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் கணிசமாக குறைக்கக்கூடியவை. எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் ஒரு பூண்டு பல்லை காலையில் எழுந்ததும் மற்றும் இரவு தூங்கும் முன்பும் தவறாமல் மென்று சாப்பிடுங்கள். 


பூண்டை சமைத்து சாப்பிடுவதை விட சமைக்காமல் சாப்பிடுவதே சிறந்தது. நெல்லிக்காய் நெல்லிக்காயில் உள்ள அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் சிறந்தவை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459