ஆசிரியர்கள் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம்: பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆசிரியர்கள் ஓய்வு வயதை குறைக்கும் திட்டம்: பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை

 


.com/

ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை குறைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை எழுந்தள்ளது. தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவன தலைவர் அ.மாயவன், மாநில நிர்வாகிகள் எஸ்.பக்தவச்சலம், எஸ்.சேது செல்வம், சி.ஜெயகுமார், ஆர்.கே.சாமி, முருகேசன் ஆகியோர் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது. முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் பணிமூப்பு அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் 45 வயதுக்கு மேல் பணியில் சேர்ந்தனர். இதனால் வறுமையில் இருந்த அவர்களது குடும்பம் தற்போது  மீண்டுள்ளது.


இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 58 ஆக குறைக்க போவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓய்வு பெறும் வயதை குறைப்பதை மறுபரிசீலனை செய்து இதற்கு பதிலாக காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை உயர்த்தித் தர வேண்டும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதி அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment