முழங்கால் வலி அதிகமாக இருக்கிறதா. ... இந்த உணவை சாப்பிட்டு பாருங்க - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

19/07/2021

முழங்கால் வலி அதிகமாக இருக்கிறதா. ... இந்த உணவை சாப்பிட்டு பாருங்க


 "முழங்கால் வலி அதிகமாக இருக்கிறதா......?????


போகர் கூறியது வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்று போகர் வாக்கு ...

       

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டால் வலி சுத்தமாக இல்லை என்பது மட்டுமின்றி உடல் சோர்வு அறவே இருக்காது.


பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து(கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க வைக்கிறது.


அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகர் நிகண்டுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

                     

குறிப்பாக, சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும்..


பிரண்டை உப்பை சுமார் 300mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபடுகிறது.


சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்...


பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் .


பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்து.

No comments:

Post a Comment