இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

 தான்பாத் இந்திய சுரங்க தொழில்நுட்ப கல்லூரியில் நிரப்பப்பட உள்ள 76 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 411002/6/2021-NFR

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 73

சம்பளம்: நிறுவனத்தின் விதிமுறைகள் படி வழங்கப்படும். 

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் 55 சதவிகிதம் மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் ஆங்கிலத்திலும், 35 வார்த்தைகள் ஹிந்தியிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீன் தேர்வு, துறைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை எஸ்பிஐ கலெக்ட் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.nfr.iitism.ac.in/index.php/recruitment/user.login
என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2021

No comments:

Post a Comment