கொரோனா 3-வது அலை? மகாராஷ்டிராவில் 10 நாட்களாக கொரோனா பாதிப்பு, மரணங்களில் திடீர் அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

13/07/2021

கொரோனா 3-வது அலை? மகாராஷ்டிராவில் 10 நாட்களாக கொரோனா பாதிப்பு, மரணங்களில் திடீர் அதிகரிப்பு

 


மும்பை: நாட்டில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 31,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 118 நாட்களில் குறைவான பாதிப்பு.மகாராஷ்டிராவில் 7603 பேர் பாதிப்பு!உலக நாடுகளில் அதிகரிப்புஅதேநேரத்தில் இந்தியாவின் ஒருநாள் பாதிப்புக்கு இணையாக உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது என கூறப்படுகிறது. இந்தியாவிலும் கடந்த 4-ந் தேதியே கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில்இந்த நிலையில் மகாராஷ்டிராவில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கடந்த 10 நாட்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூலை 2-ந் தேதி முதல் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சுமார் 8 ஆயிரத்தை தாண்டியதாகவே இருக்கிறது. ஜூன் மாதத்தில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஏற்பட்டிருக்கிற இந்த மாற்றம் கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதா? என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா மரணங்கள் கூடுகிறதுமேலும் மகாராஷ்டிராவின் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையும் கடந்த 10 நாட்களில் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. ஜூலை 1-ந் தேதி ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 334 ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த 8-ந் தேதி முதல் ஒருநாள் மரணங்கள் எண்ணிக்கை கடந்த 10-ந் தேதி முதல் 400- ஐ தாண்டியதாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.கேரளாவில் குறைகிறதுநாட்டில் கேரளா தொடர்ந்து கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் கேரளாவில் கொரோனா பாதிப்பு, மரணங்கள் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.,..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459