பிளஸ் 2 , இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலை.. கன்னியகுமாரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பிளஸ் 2 , இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலை.. கன்னியகுமாரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு


நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் குழந்தைகள் நல குழுவில் காலியாக உள்ள உதவியாளர் கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:குமரி மாவட்ட குழந்தைகள் நல பிரிவில் காலியாக உள்ள உதவியாளர்() , கணினி இயக்குபவர் (( பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப் பணியிடத்திற்கு 12-ஆம் வகுப்பு, இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப்படிப்பு பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்குவதில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆக இருத்தல் கூடாது.இப்பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 9,000 தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும். மாதிரி விண்ணப்பப் படிவம் குமரி மாவட்ட நிர்வாக வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் வரவேற்கப்படுகின்றன. 17.07. 2021 அன்று மாலை 5.30மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , இணைப்பு கட்டிடம் , மூன்றாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாகர்கோவில்-629 001 என்ற முகவரியில் வந்து சேரும் வகையில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது...

Official Notification : Click Here

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்


மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment