ஆடி மாத ராசி பலன் 2021-இந்த 6 ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆடி மாத ராசி பலன் 2021-இந்த 6 ராசிக்காரர்களுக்கு அற்புதங்கள் நிகழும்

 


சென்னை: ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் பயணம் செய்வதால் கடக மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆடி மாதம் தட்சிணாயண புண்ணிய காலம் ஆரம்பமாகிறது. தை முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி பயணம் செய்வார் இது உத்தராயண புண்ணியகாலம் ஆகும். ஆடி முதல் மார்கழி வரை சூரியன் தெற்கு திசையில் பயணம் செய்வார். சூரியனின் தென்திசை பயணம் தொடங்குவதை நாம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று சொல்கிறோம். ஆடி மாதம் ஜூலை 17ஆம் தேதி பிறக்கப் போகிறது. ஆகஸ்ட் 16ஆம் தேதி வரைக்கும் ஆடி மாதம் உள்ளது. இந்த மாதத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கூழ் ஊற்றி அம்மனை வணங்குவார்கள். விஷ்ணு சயன ஏகாதசி, ஆடிப்பூரம், ஸ்வர்ண கவுரி விரதம், குரு பூர்ணிமா,ஆடி கிருத்திகை, ஆடி 18ஆம் பெருக்கு, நாக பஞ்சமி, கருட பஞ்சமி, கருடாழ்வார் ஜெயந்தி, பானு சப்தமி போன்ற பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.சூப்பர் நியூஸ்.. இன்னும் 4-6 வாரங்களில் கோவாக்சினுக்குஅனுமதி? சவுமியா சுவாமிநாதன் முக்கிய தகவல் ஆடி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கடக ராசியில் சூரியன், செவ்வாய் சிம்ம ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது மகர ராசியில் சனி, கும்ப ராசியில் குரு, ரிஷபத்தில் ராகு, மிதுன ராசியில் புதன் என கிரகங்கள் பயணிக்கின்றன. ஆடி 4ஆம் தேதி செவ்வாய் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். 9 ஆம் தேதி புதன் கடக ராசியில் பயணம் செய்கிறார். 23ஆம் தேதி சிம்ம ராசிக்கு புதன் மாறுகிறார். ஆடி 26ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் முதல் மீனம் வரை 12ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படியிருக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அற்புதமான மாதமாக அமைந்துள்ளது. புத்திசாலித்தனம் பலிச்சிடும். மன தைரியம் அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தொழில், வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் வீடுகளில் சுப காரியங்கள் நடைபெறும். ஆடி மாதத்தில் ஆதாயங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க அப்ளை செய்வீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலர் புதிதாக வண்டி வாகனம் வாங்குவீர்கள். சூரியன் நான்காம் வீட்டில் பயணிப்பதால் காதலில் பிரச்சினை வரலாம் கவனம். பிள்ளைகளால் சந்தோஷம் ஏற்படும். பங்குச்சந்தை முதலீடுகளை பெரிய அளவில் தவிர்த்து விடுங்கள். செவ்வாய்கிழமை விநாயகரை வழிபடவும். அங்காரக சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.ரிஷபம்ரிஷப ராசிக்காரர்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். காரணம் தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பணப்புழக்கம் அதிகரிக்கும். பேச்சுக்களுக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சொத்துக்கள் வாங்க யோகம் வரும். பெண்களுக்கு வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை தரும். கையில் இருக்கும் வேலையை விட்டு விட வேண்டாம். வேலை மாறுவதற்கு இது ஏற்ற காலம் அல்ல. ஆடி மாதத்தில் அவசரப்பட வேண்டாம். குல தெய்வ அனுகூலம் இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும்.மிதுனம்நீண்ட நாட்களாக நினைத்திருந்த காரியங்கள் கை வரும். உறவினர்களால் உதவிகள் தேடி வரும். உங்களுயை முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். அரசு வேலைக்கு போட்டித் தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனுக்கு முயற்சி செய்பவர்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் ஏற்படும். உங்களின் கவுரவம் அந்தஸ்து புகழ் காக்கப்படும். அடுத்தவரின் விசயங்களில் தேவையில்லாமல் தலையிட வேண்டாம். உயர்கல்விக்காக முயற்சி செய்யலாம். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும்.கடகம்ஆடி மாதம் கடக ராசிக்காரர்களுக்கு ஆதாயங்கள் நிறைந்த மாதம் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதால் நிறைய பண வரவு அதிகரிக்கும். தகவல் தொடர்புத்துறையில் நன்மைகள் நடைபெறும். எதிர்பாராத பண வரவு வரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். நிறைய சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். காதல் கை கூடி வரும் கணவன் மனைவி இடையே இருந்த சிக்கல்கள் நீங்கும். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அனுகிரகத்தினால் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கால்வலி பிரச்சினைகள் வரலாம். ஆடி அமாவாசை நாளில் இறந்த முன்னோர்களை நினைத்து வணங்க நன்மைகள் நடைபெறும்.சிம்மம்சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதத்தில் அம்மன் அருள் அதிகம் கிடைக்கப் போகிறது. சூரியன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வரவுக்கு ஏற்ற செலவு கிடைக்கும் சிக்கனம் தேவைப்படும். வீண் வம்பு வழக்குகள் வரும் பொறுமையும் கவனம் தேவை. ராசியில் செவ்வாய் சுக்கிரன் வருவதால் வேலையில் கவனம் விழிப்புணர்வு தேவை. உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீர்ந்து விடும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். எதிர்பாராத பண வரவு வரும். தந்தையின் சொத்து விற்பனையில் பங்கு கிடைக்கும். குல தெய்வ வழிபாடு செய்வது பாதிப்புகள் நீங்கி நன்மையை கொடுப்பார். பெரிய அளவில் முடிவு எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்யவும். கையில் உள்ள பணத்தை பத்திரப்படுத்துங்கள். இந்த மாதம் பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்த்து விடவும்.கன்னிபுதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, ஆடி மாதத்தில் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய் உடன் இணைந்து பயணம் செய்கிறார். விரைய ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் பயணம் செய்கின்றனர். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் மாதம். சகோதரர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பண வரவு அதிகம் வந்தாலும் கூடவே செலவுகளும் வரும். பணப்பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. குரு ஆறாம் வீட்டில் வக்ரம் பெற்று பயணம் செய்வதால் பேச்சில் கவனம் தேவை. வேலை தொழில் மாற்றம் ஏற்படும். கண்களில் கவனம் தேவை. தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. இல்லாவிட்டால் தேவையற்ற சிக்கல் ஏற்படும். பெண்கள் எதிர்பாலினத்தவர்களிடம் பேசும் போது கவனம். சமையலறையில் வேலை செய்யும் விழிப்புணர்வு தேவை. ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு படையல் போட்டு வணங்கவும்.

No comments:

Post a Comment