தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

 


சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த காலஅவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: சிறுகுறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில்  ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் ஜூன் 15ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேறமேலும் சிறு குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத்தொகை கேட்பு செலுத்தவும்,தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் ஜூன் 15வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.,

No comments:

Post a Comment