கொரோனா வைரஸ் காற்றில் பரவும.. பழைய வழிகாட்டு நெறிமுறையில் மாற்றம் - ஆசிரியர் மலர்

Latest

26/05/2021

கொரோனா வைரஸ் காற்றில் பரவும.. பழைய வழிகாட்டு நெறிமுறையில் மாற்றம்

  


டெல்லி: கொரோனா, மருத்துவ மேலாண்மை வழிகாட்டுதல்களை மாற்றியமைத்துள்ள, மத்திய சுகாதார அமைச்சகம்,*

Http://www.asiriyarmalar.com

 வைரஸ் "பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல் அல்லது பேசும்போது வெளியிடப்படும் நீர்த்துளி வழியாக காற்றில் பரவுகிறது" என்று தெரிவித்துள்ளது."இந்த நீர்த்துளிகள் மேற்பரப்புகளிலும் () இறங்கக்கூடும். ஒரு நபர், வைரஸ் இருக்கும் மேற்பரப்பைத் தொட்டு, பின்னர் அவரது கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொட்டால் நோய் தொற்று பரவக்கூடும்" என்று சுகாதார அமைச்சக தேசிய மருத்துவ மேலாண்மை நெறிமுறை கூறியுள்ளது அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் அலுவலகம் சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதலில், பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது 10 மீட்டர் வரை வைரஸ் காற்றில் பரவக்கூடும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.பேசும்போது, இருமும்போதுநோயாளி தும்மும்போது, பேசும்போது, இரும்மும்போது, வாய் அல்லது மூக்கு வழியாக வெளியாகும், பெரிய அளவிலான நீர்த்துளிகள் தரையிலும் மேற்பரப்பிலும் விழுகின்றன, http://www.asiriyarmalar.com  மேலும் சிறிய ஏரோசல் துகள்கள் காற்றில் அதிக தூரத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன என்று, முதன்மை விஞ்ஞான, ஆலோசகர் கூறியிருந்தார்.காற்றோட்டம் அவசியம்மூடிய அல்லது காற்றோட்டமற்ற உட்புற அறைகளில் இவை எளிதாக காற்றில் பரவும் எனக் கூறியிருந்தார். எனவே அதற்கேற்ப சுகாதார அமைச்சகம், தனது வழிகாட்டுதலை மாற்றியுள்ளது.போன வருட நெறிமுறைகடந்த வருடம் ஜூன் மாதம், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதலில், கொரோனா பாதித்த நபருக்கு நெருக்கமான பழகுபவர்களுக்குத்தான் நோய் பரவல் ஏற்பட வாய்ப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அது இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.எவ்வளவு தூரம்பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து 2 மீட்டருக்குள் நீர்த்துளிகள் விழுகின்றன, மேலும் ஏரோசோல்களை 10 மீட்டர் வரை காற்றில் கொண்டு செல்ல முடியும். எனவே கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஆறு அடி (1.8 மீட்டர்) தூரம் இடைவெளி விட்டு சமூக விலகலை மேற்கொள்வதுதான் நல்லது என்பது இதுவரை கூறப்பட்ட அறிவுரையாகும். ஆனால் புதிய விதிமுறை மாற்றத்தின்படி பார்த்தால், 30 அடி தூரமாவது விலகி இருப்பதே நல்லது. மூடப்பட்ட அறைகள், வெளிக் காற்றோட்டம் இல்லாத பகுதிகளில்தான் இதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, சாதாரணமாக, தூரத்திலுள்ள வேறு வீட்டிலிருந்து உங்கள் வீட்டுக்கு நீண்ட தூரம் காற்றில் கொரோனா வைரஸ் மிதந்து வரும் என்ற அச்சம் தேவையில்லை.-

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459