காற்றில் விரைவாக பரவக்கூடிய புதிய மரபணு மாற்ற வைரஸ் தங்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

காற்றில் விரைவாக பரவக்கூடிய புதிய மரபணு மாற்ற வைரஸ் தங்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் அறிவிப்பு

 


காற்றில் விரைவாக பரவக்கூடிய புதிய மரபணு மாற்ற வைரஸ் தங்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் தெரிவித்துள்ளது. 

 

இந்த வைரசில், இந்தியா மற்றும் பிரிட்டனில் முதலில்  காணப்பட வைரசுகளின் மரபுக்கூறுகள் இருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. வியட்னாமின் தொழிற்பேட்டை பகுதிகள், பெரிய நகரங்களான ஹனோய், ஹோசிமின் சிட்டி ஆகியவற்றில் இந்த வைரஸ் வேகமாக பரவுவதால் அதை கட்டுப்படுத்த வியட்னாம் அரசு கடுமையாக போராடி வருவதாக கூறப்படுகிறது. 

 

தொண்டை சளியில் காணப்படும் இந்த வைரசின் அடர்த்தி, பலமடங்கு அதிகரித்து, சுற்றுப்புறங்களில் தீவிர தொற்றை ஏற்படுத்துவதாக, வியட்னாமின் சுகாதார அமைச்சர் குயென் தனா லாங் (Nguyen Thanh Long) கொரோனா குறித்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.-Polimer News

No comments:

Post a Comment