பள்ளி வேலைநாள் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் - பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் - ஆசிரியர் மலர்

Latest

16/04/2021

பள்ளி வேலைநாள் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் - பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்

 16.04.2021 இன்று பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளிக்காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்

 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளுக்கு நாளை 17.04.2021 சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது . மேலும் உயர்நிலை | மேல்நிலைப் பள்ளிகளை பொறுத்தமட்டில் இனி வரும் காலங்களில் வாரத்திற்கு 5 வேலை நாட்கள் ( திங்கள் முதல் வெள்ளி வரை ) மட்டுமே செயல்படும் . இதனை தொடர்ந்து 17.04.2021 அன்று மேல்நிலைப் பள்ளி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறுவதால் , செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். செய்முறை தேர்வு இல்லாத பிரிவு மாணவர்களுக்கு ( Non Practical Groups Strudents ) 17.04.2021 முதல் Study Leave விடப்படுகிறது. செய்முறைத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் தங்களது செய்முறை தேர்வு முடிந்த அடுத்த நாள் முதல் Study Leave விடப்படுகிறது. அனைத்து மாணவர்களையும் Hall Ticked வழங்கும் நாளன்று வரவழைத்து அரசின் நிலையான வழிகாட்டுதலை ( SOP ) பின்பற்றி Hall Ticket வழங்கப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

Screenshot_20210416_210416

Screenshot_20210416_210429

IMG-20210416-WA0046


கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (17.04.2021) சனிக்கிழமை அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் விடுமுறை. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (17.04.2021) அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பள்ளி வேலை நாள். நாகை மாவட்டத்தில் நாளை (17.04.2021) சனிக்கிழமை அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் விடுமுறை. 


அன்பார்ந்த தலைமை ஆசிரியர்களே மெட்ரிக் பள்ளி முதல்வர்களே

திருவாரூர் மாவட்டத்தில் நாளை 17 -4-2021 சனிக்கிழமை மட்டும் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அடுத்த வாரம் முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அரசு அறிவிப்பு வரும் வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459