இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 25, 2021 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 25, 2021


சென்னை: பிலவ வருடம் சித்திரை 12 ஆம் தேதி ஏப்ரல் 25, 2021 ஞாயிற்றுக்கிழமை. திரயோதசி திதி மாலை 04.13 மணி வரை அதன் பின் சதுர்த்தசி. ஹஸ்தம் இரவு 01.54 மணி வரை அதன் பின் சித்திரை. சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.மேஷம்சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.ரிஷபம்சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி கூடினாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். பயணங்களை தவிர்த்து விடவும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வீண் விரைய செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.மிதுனம்சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்வது நல்லது. பெரியோர்களின் ஆசி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பணிச்சுமை நீங்கி ஓய்வு கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.கடகம்சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் ஒன்றாக இணைந்து பொழுதை கழிப்பீர்கள். நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து செய்யும் காரியம் நன்மையில் முடியும். உறவினர்களின் ஆலோசனைகளால் குடும்பத்தில் உற்சாகம் பிறக்கும்.சிம்மம்சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் பணப்பிரச்சினைகள் ஏற்படும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் உண்டாகலாம். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பயணங்களை தவிர்ப்பது நல்லது.கன்னிசந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசியில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனக்குழப்பம் நீங்க வீட்டில் விளக்கேற்றி வழிபடவும்.துலாம்சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் இன்றைய தினம் உற்சாகம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் தோன்றும். வீண் பேச்சுக்களை தவிர்த்து விடவும். பயணங்களைத் தவிர்த்து விடவும்.விருச்சிகம்சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் நோய்கள் நீங்கும்.தனுசுசந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களைத் தவிர்த்து விடவும். ஓய்வான மனநிலையில் இருப்பீர்கள். உடம்பில் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அதிகரிக்கும்.மகரம்சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் சற்று கவனமுடன் பழகுவது நல்லது. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். வெளியூர் பயணங்களைத் தவிர்த்து விடவும்.கும்பம்சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சினைகள் வரலாம். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களைத் தவிர்த்து விடவும். மன அமைதிக்கு கொஞ்சம் மிளகு பனங்கற்கண்டு சாப்பிடவும்.மீனம்சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திரன் பார்வையால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.'

No comments:

Post a Comment