தமிழகத்தில் சாதிவாரி யான் புள்ளிவிபரங்கள் தயாரிக்கலாமா ..... நீதிமன்றம் தீர்ப்பு விபரம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் சாதிவாரி யான் புள்ளிவிபரங்கள் தயாரிக்கலாமா ..... நீதிமன்றம் தீர்ப்பு விபரம்

 


தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களைத் திரட்ட ஆணையத்திற்கு ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியதை எதிர்த்தும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை விதிக்கக் கோரியும் தொடரப்பட்ட வழக்கை செய்தது.

தமிழகத்தில் சாதிவாரியான புள்ளிவிவரங்களை திரட்டி அரசுக்கு அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.குலசேகரன் தலைமையில் அமைக்கப்பட்டது. அந்த 6 மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆறு மாத அவகாசம் வழங்கியதை எதிர்த்தும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில் சாதி ரீதியில் உள் ஒதுக்கீடு வழங்க தடை விதிக்கக் கோரியும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “கடந்த 1983-ம் ஆண்டு சாதி ரீதியாக கணக்கெடுப்பு நடத்த அம்பாகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், மூன்று ஆண்டுகளை எடுத்துள்ள நிலையில், தற்போதைய ஆறு மாதங்களில் அறிக்கை அளிக்க கூறப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது”. என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆணையம் தனது பரிந்துரைகளை அரசுக்கு வழங்காத நிலையில், இந்த வழக்கு முன் கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறிய நீதிபதிகள், இந்த வழக்கை  ரத்து  செய்து உத்தரவிட்டனர். ஒரு நபர் அறிக்கை அளித்து, அதை ஏற்று அரசு உத்தரவு பிறப்பித்தால், அதை தொடரலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a comment