வாட்ஸ் ஆப் செயலியின் புதிய சேவை நிபந்தனைகள் மற்றும் ரகசிய கொள்கைகளால் காரணமாக, டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு - ஆசிரியர் மலர்

Latest

09/01/2021

வாட்ஸ் ஆப் செயலியின் புதிய சேவை நிபந்தனைகள் மற்றும் ரகசிய கொள்கைகளால் காரணமாக, டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

 



புதுடில்லி: வாட்ஸ் ஆப் செயலியின் புதிய சேவை நிபந்தனைகள் மற்றும் ரகசிய கொள்கைகளால் காரணமாக, டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

வாட்ஸ் ஆப் செயலியில் யார் வேண்டுமானாலும், என்ன தகவலை வேண்டுமானாலும் பதிவிட முடியும். பகிர்ந்து கொள்ளவும் முடியும். இதனால் பல்வேறு சிக்கல்களை வாட்ஸ் ஆப் எதிர்கொண்டது. இதையடுத்து பதிவுகளை பகிர்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஒரு பதிவை அதிக பட்சம் 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும், அதிகம் பகிரப்பட்ட பதிவுகளை ஒரு முறை மட்டுமே மீண்டும் பதிவிட முடியும் உள்ளிட்ட பல மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. இருந்தும் பிரச்னைகள் குறையவில்லை. இதையடுத்து முக்கிய விதிமுறைகளை வாட்ஸ் ஆப் அமல்படுத்த உள்ளது. பகிரப்படும் தகவலின் உண்மைத் தன்மைக்கு பகிர்பவரே பொறுப்பு உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. பயனாளர்களின் மொபைல் எண், இருப்பிடம், புகைப்படம், வீடியோ உள்ளிட்ட தகவல்கள் சேமித்து வைக்கப்படும். அந்த அம்சத்துடன் கூடிய விதிமுறையை ஏற்றால் மட்டுமே அந்த அலைபேசியில் செயலி தொடரும். இல்லையெனில் செயலி அழிந்துவிடும். இந்த நடைமுறையை பிப்.,8 முதல் அமல்படுத்த இருப்பதாக வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

Join Telegram link: https://bit.ly/3n9Wkek

இதனால், ஏராளமான பயனாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். சில பிரபலங்கள் சிக்னல் செயலியை பயன்படுத்தும்படியும், இன்னும் சிலர் வாட்ஸ் ஆப் செயலிக்கு மாற்றாக வேறு செயலியை பயன்படுத்தும்படி தெரிவித்தனர். இதனையடுத்து சிக்னல், டெலிகிராம் செயலியை, கடந்த சில நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதில் சிக்னல் செயலியில் பதிவிறக்கம் செய்வோரின் எண்ணிக்கை, கடந்த 38 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் புதன் அன்று, 1,600 பேர் பதிவிறக்கம் செய்த நிலையில், கடந்த 6ம் தேதி மட்டும் 2,200 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆப்பிள் ஐஸ்டோரில், அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலியில் சிக்னல் செயலி முதலிடத்தை பிடித்துள்ளது. அதேநேரம். வாட்ஸ்ஆப்பை பதிவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 11 % குறைந்துள்ளது.

Join Telegram : CLICK HERE

டெலிகிராம் குரூப்பில் இணைய இங்கே கிளிக் செய்யவும்


மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு செய்தியை அறிய இங்கே கிளிக் செய்யவும்


இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459