ஜனவரி 27ஆம் தேதி ஆயத்த மாநாடு- அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு! - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஜனவரி 27ஆம் தேதி ஆயத்த மாநாடு- அரசு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

 


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், மதுரையில் மாநில அளவிலான ஆயத்த மாநாடு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு

நிறைவேற்றாததால் இந்த ஆய்த்த மாநாட்டில் போராட்டங்கள் நடத்த முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


 மதுரையில் ஆயத்த மாநாடு:

தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அரசு ஊழியர்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து ஊழியர்கள் சங்க பொது செயலாளர் செல்வம் கூறியதாவது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அறிமுகப்படுத்திய புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசிடம் பல முறை கோரிக்கை வைத்தும் பலனளிக்கவில்லை. 

மேலும் புதிய கல்வி வேலை வாய்ப்பு தகவலை பெற இங்கே கிளிக் செய்யவும்


மேலும் சத்துணவு, கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், ஊராட்சி செயலாளர் போன்றவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், சாலை பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக மாற்றுதல், அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக வழங்கப்படாத அகவிலைப்படி, சரண்டர் போன்றவற்றை திரும்ப வழங்குதல் ஆகிய கோரிக்கைகள் தமிழக அரசிடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அதற்கு தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும் அரசுத்துறைகளில் 4.5 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் பணி சுமை அதிகரிப்பதால், இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை சந்திக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தது. எனவே இந்த கோரிக்கைகளை விரைவில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் ஜனவரி மாதம் 27-ஆம் தேதி மதுரையில் நடக்கும் ஆயத்த கூட்டத்தில் போராட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்படும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment