அனைத்து ஆசிரியர்களுக்கும் திறன் அட்டைகள் ( SMART CARD ) தயார் - வழங்குவதற்கான அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அனைத்து ஆசிரியர்களுக்கும் திறன் அட்டைகள் ( SMART CARD ) தயார் - வழங்குவதற்கான அறிவுரைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

 

SMART CARD வழங்கப்பட உள்ளது,  பள்ளிக் கல்வித் துறையின் மூலமாக  அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது -  பள்ளிக்கல்வி இயக்குநரின்  செயல்முறைகள்.

images%2528106%2529


அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் ( Smart Card ) அச்சிடப்பட்டு lanyard மற்றும் Card holder உடன் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக முகவரிக்கு 30.11.2020 முதல் அனுப்பப்பட்டு வருகிறது . திறன் அட்டைகள் வழங்குவது சார்பாக கீழ்க்கண்ட அறிவுரையினை பின்பற்றிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 


1. முதன்மைக் கல்வி அலுவலர்கள் திறன் அட்டைகள் பெறப்பட்டவுடன் , அதில் உள்ள எண்ணிக்கையினை உறுதி செய்த பின்னர் , 24 மணி நேரத்திற்குள் தங்கள் நிருவாக வரம்பிற்குட்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரிடம் நேரிடையாக ஒப்படைக்கப்பட வேண்டும் . 

2. அதனைத் தொடர்ந்து திறன் அட்டைகள் மற்றும் அதற்கான உபபொருட்கள் ( lanyard and Card holder ) பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதல் கடிதம் மற்றும் பெறப்பட்ட எண்ணிக்கை முதலான விவரங்களையும் இணைப்பில் உள்ள படிவத்தின்படி சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் , தத்தமது முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரில் வழங்கிட வேண்டும் . 

3. மாவட்டக் கல்வி அலுவலர்கள் தம் நிருவாக வரம்பிற்குட்பட்ட அனைத்துவகையான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களை நேரில் வரவழைத்து சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் ( Smart Card ) lanyard மற்றும் Card holder உடன் ஒப்படைத்து அதற்கான ஒப்புதல் கடிதங்களை தொகுத்து , அறிக்கையாக சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் . 

4. முதன்மைக் கல்வி அலுவலர்கள் தம் நிருவாக வரம்பிற்குட்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஒப்புதல் கடிதங்களை தொகுத்து , வருவாய் மாவட்ட அளவிலான அறிக்கையினை , ( Both in Hard Copy and Soft Copy ) இணை இயக்குநர் ( தொழிற்கல்வி ) அவர்களின் பெயரிட்ட முகவரிக்கு விரைவஞ்சல் அல்லது தூதஞ்சல் ( By Speed Post / Courier ) மூலம் அனுப்பப்பட வேண்டும் . 

5. வருவாய் மாவட்ட அளவிலான தொகுப்பறிக்கையினை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கையொப்பமிட்டு அனுப்பப்பட வேண்டும். 

6. மேற்குறிப்பிட்ட அறிவுரைகளை பின்பற்றி உடனுக்குடன் பணிகளை முடிக்கப்பட வேண்டுமெனவும் , இதில் சுனக்கம் ஏதும் கூடாது எனவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது.


Smart card distribution Dir Instructions - Download here...

No comments:

Post a Comment