இறுதி பருவ மறுதேர்வு முடிவுகள் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இறுதி பருவ மறுதேர்வு முடிவுகள் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு

 


மாணவர்களின் இறுதிப் பருவ மறு தேர்வுக்கான முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது.

கரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டன.அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. மேலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப். 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி முடிவடைந்தன. தேர்வுகள் ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்கப்பட்டது.

இதற்கிடையே இணையவழித் தேர்வின் இடையே மின்சாரக் கோளாறு அல்லது இணையத்தில் பிரச்சினை காரணமாக பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வைச் சில மாணவர்கள் எழுதவில்லை. அவர்களில் இளங்கலை மாணவர்களுக்கு நவ.17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இணைய வழியில் மறுதேர்வு நடத்தப்பட்டது. முதுகலை மாணவர்களுக்கு நவ.20, 21 ஆகிய தேதிகளில் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் அவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை 
https://aucoe.annauniv.edu/regular_result/index.php என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு, தங்களின் தேர்வு முடிவுகளை அறியலாம்.

No comments:

Post a Comment