ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் நவீன மாற்றங்கள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

26/12/2020

ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளத்தில் நவீன மாற்றங்கள்

 IMG_20201226_071854


 ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசி நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட உள்ளது.ரயில்களில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய உதவும் ஐஆர்சிடிசி இணையதளத்தை மத்திய ரயில்வே அமைச்சகம் நடத்தி வருகிறது. இணைய வழி முன்பதிவுகள் அதிகரித்திருப்பதன் தேவையை கருத்தில் கொண்டு, தற்போது ஐஆர்சிடிசி தளம் மேம்படுத்தப்பட்டு வருகிறது.


 இந்த பணிகளை டெல்லியில் நேற்று ஆய்வு செய்த பின் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அளித்த பேட்டியில், ‘‘டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து துறைகளும் நவீனமயமாகி வருகின்றன. இதன் அடிப்படையில் ரயில்வே துறையும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக,  டிக்கெட் முன்பதிவை விரைவுப்படுத்துவதற்காக ஐஆர்சிடிசி  இணையதளத்தில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட உள்ளன.  இதன்மூலம்,  டிக்கெட் முன்பதிவு மிகவும் எளிமையாக்கப்பட உள்ளது,’’ என்றார்.

No comments:

Post a Comment