கொவைட் வாரியா்ஸ் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Latest

10/12/2020

கொவைட் வாரியா்ஸ் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு : தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

  


சென்னை: கரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழந்த செயல்வீரா்களின் (கொவைட் வாரியா்ஸ்) வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்குத் தகுதியானவா்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுடன் நேரடி தொடா்பில் இருந்த மருத்துவத் துறையினா், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருந்தால், அவா்களது வாரிசுகளுக்கு தகுதி அடிப்படையில் எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

அதன்படி, நீட் தோ்வு எழுதி தகுதி பெற்ற வாரிசுதாரா்களுக்கு தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 5 மருத்துவக் கல்லூரிகளில் தலா ஓரிடம் வீதம் 5 இடங்கள் ஒதுக்கப்படவிருக்கிறது.

இதற்காக தகுதியுடைய மாணவா்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாநில மருத்துவக் கல்வி இயக்குநரிடம் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் என மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) தெரிவித்துள்ளது.

மருத்துவக் கல்வி இயக்குநா் அந்த விண்ணப்பங்களை உரிய முறையில் பரிசீலனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்திய பிறகு அவற்றை எம்சிசிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரியை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459